பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 என் அமெரிக்கப் பயணம்

(2) அடுத்து மின்சார உற்பத்தித் திட்டம்’ செயற்படும் இடத்தைப் பார்க்க விழைகின்றோம். நயாகரா பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடத்திற்கு வருகின்றோம். அதிகதூரம் நடக்கமுடியாத என்னையும் என்துணைவியையும் நயாகரா பல்கலைக் கழக வளாகத்தில் காருடன் ஒரு மரத்துநிழலில் இருக்கச் செய்துவிட்டு நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யும் அமைப்பினை பார்ப்பதற்காக என் மகனும் மருமகளும் பிரிந்து சென்று ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்து சேர்ந்தனர்.

நீர்மின்சார உற்பத்தி யந்திர அமைப்பு: உலகின் முதன் முதலாக அருவிகள் உள்ள இடத்தில் வாணிக முறையில் 1895-இல் நிறுவப் பெற்றது நயாகரா மின்னாற்றல் திட்டம்’, 13 மின்சார இயக்கிகளைக் கொண்டு 1961-இல் தொடங்கப் பெற்றது. இவை 2,190,000 கிலோவாட் உற்பத்தி செய்யக் கூடியவை. உலகிலேயே நீர்மின்சார வசதிகளமைந்த அமைப்புகளில் இதுவும் ஒன்று. ஆயினும், இந்த ஆற்றல் என்றுமே நிலையாக இருக்க முடியாது; அருவிகள் ஆண்டிற்கு ஒர் அங்குலம் வீதம் தேய்ந்து கொண்டே வருகின்றன. எனினும் அடுத்த 2500 ஆண்டுகள் வரை முதன் முதலில் கண்டபோது இருந்த நிலையிலேயே இருக்கும் என்பது உறுதி.

இயந்திர அமைப்பு உள்ள இடத்திற்குச்” சென்ற பொழுது, அந்த விக்டோரியா” என்ற கட்டடத்தில் இரண்டு தளங்களில் காட்டப் பெற்றிருந்தது. மின்சாரத்தை எப்படி வீணாக்காமல் செலவழிக்கப்படுகிறது என்பது முதல் பல பயன்படும் முறைகள் விளக்கப் பெறுகின்றன. இவற்றை அறிந்த நிலையில் என் மகனும் மருமகளும் எங்களுடன் வந்து சேர்ந்தனர்.

அடுத்து, காரில் சென்று சாலையில் இருந்த வண்ணம் மின்சார உற்பத்தி அமைப்பு இருந்த நிலையைக் கண்டு மகிழ்ந்தோம். அருவிகளை அடையும் முன்னர் 4% கல் தொலைவில் ஆற்றின் பிரவாகத்திலிருந்து மின்சாரம் எடுக்கப் பெறுகின்றது என்பது நினைவிலிருத்தத் தக்கது.

இத்திட்டம் நியுயார்க்கின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி வசதியைத்தரும் இடமாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் நயாகரா ஆற்றின் ஆற்றலை நாட்டின் தெளிவான குறைந்த செலவிலான மின்சாரமாக மாற்றியது வியப்பிற்குரியது. இத்திட்டம் இரண்டு முக்கிய பகுதிகளையுடையது. ஒன்று (இராபர்ட் மோசஸ் நயாகரா ஆற்றல் அமைப்பு”. இங்கு மின்சாரத்தின் பெரும்பகுதி

36. Power Project 37. The Niagara Power Project 38. Generators 39. The Niagara Power Project’s POWER VISTA

40. Victorian House 41. Robert Moses Niagara Power Plant