பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ♦ என் அமெரிக்கப் பயணம்

கலக லென்ற மொழியும் - தெய்வக்
     களிது லங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
     இன்பம் வேண்டு கின்றேன்

- பாரதியார் கவிதைகள் - தோ.பா.
- திருவேட்கை.1

என்ற பாரதியாரின் பாடலைப் பாடி வணங்குகின்றோம். அடுத்து பொறுமைக்கு இலக்கணமாகத் இலங்கும் பூதேவியை வணங்கி மகிழ்கின்றோம்.

பின்னர் சிவபெருமான் சந்நிதிக்கு வருகின்றோம். வள்ளல் பெருமான் கை கொடுத்து உதவுகின்றார்.

சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
       சன்மார்க்க சபையில் எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால் எனக்கு வாய்த்தொரு தெய்வம்
       மாதவரா தியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
       எண்ணுதொறும் என்னுளந்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாம் செயப்பணித்த தெய்வம்
       சிற்சமையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

          - திருவருட்பா - ஆறாம் திருமுறை - பரசிவ நிலை.7

என்ற பாடலை ஓதி உளங் கரைகின்றோம். அடுத்து முருகன் தெய்வயானை வள்ளி சமேதராக எழுந்தருளியிருக்கும் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமானை,

மூவிரு முகங்கள் போற்றி
       முகம்மொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
       ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
       மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி

       திருக்கைவேல் போற்றி போற்றி

என்ற கந்தபுராணப் பாடலால் அவனை வாழ்த்தி வணங்குகின்றோம்.

பின்னர் துர்க்கை சந்நிதிக்கு வருகின்றோம். அச்சக்தி பெருமாட்டியை,