பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122♦என் அமெரிக்கப் பயணம்


இங்ஙனம் சேவித்த நிலையில் வள்ளி தெய்வயானையுடன் எழுந்தருளியிருக்கும் முருகன் சந்நிதிக்கு வருகின்றோம்.

தேவர்கள் தேவே யோலம்;
சிறந்தசிற் பரனே யோலம்;
மேவலர்க் கிடியே யோலம்;
வேற்படை விமலா வோலம்
பாவலர்க் கெளியாய் ஒலம்;
பன்னிரு புயத்தாய் ஒலம்;
மூவரு மாகி நின்ற
மூர்த்தியே ஒலம் ஒலம். - கந்தபுராணம்

என்ற பாடலை மிடற்றொலி கொண்டு ஒதி அப்பெருமானைச் சரண்புகுகின்றோம்.


இந்நிலையில் இராமர்-சீதை-இலக்குவன் எழுந்தருளியிருக்கும் சந்நிதிக்கு வருகின்றோம்.

மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்;
மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்;
விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்;
வித்தகத்தின் திருவருளே வேண்டி நின்றேன்;
புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி
கண்ணாளா சுடர்க்கமல கண்ணா என்னைக்
கைவிடில்என் செய்வேனே கடைய னேனே

திருவருட்பா இரண். திருமுறை.

இராம நாமப் பதிகம்


என்ற பாடலை மனமுருகிப் பாடி வழிபடுகின்றோம்.

அடுத்து இராமதூதன் அநுமன் சந்நிதிக்கு வருகின்றோம். அந்தச் சிறிய திருவடியை,

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றுஆ றாக
ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்குகண்டு அயலார் ஊரில்