பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 123

அஞ்சிலே ஒன்றை வைத்துரன்

அவன்எமை அளித்துக் காப்பான்

- கம்பரா. பாலகா. காப்பு அநுமன்துதி

என்ற கம்பன் வாக்கால் ஒதி உளம்கரைகின்றோம்.

இறுதியாக ஐயப்பன் சந்நிதிக்கு வருகின்றோம். இவனை ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று மூன்று தரம் சொல்லி வணங்கிவிட்டு வீடு திரும்பும்போது, வெளியில் நவக்கிரக சந்நிதி இருப்பதைக் கண்ணுறுகின்றோம். அவர்களையும் கோளாறு பதிகம் (சம்பந்தர்) நினைவுடன் வணங்கிவிட்டு இல்லம் திரும்புகின்றோம் - பகல் ஒரு மணிக்கு. 2. சிரீ சுவாமி நாராயண மந்திர்': மே 17, வெள்ளி முற்பகல் சுமார் 10.30 மணி ஐந்து கல் தொலைவிலுள்ள திருக்கோயிலுக்குப் புறப்பட்டோம். அரை மணி நேரத்தில் திருக்கோயிலை வந்தடைந்தோம். நுழைவாயில் தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். எல்லாப் பக்கங்களிலும் கதவு மூடிய நிலையில் இருந்தது. இறுதியாக மாடிமேல் உள்ள ஒரு நுழைவாயிலை அடைந்து திறக்கவே கதவு திறந்தது. உள்ளே விநாயகர், கண்ணபிரான், நாராயணன், குருமார்கள், அநுமன் ஆகியோர் திருமேனிகள் இருப்பதைக் காண்கின்றோம்.

முதலில் விநாயகர் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமானை,

பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில்

பிறங்கிய ஒருதனிப் பொருளே அரும்பொருள் ஆகிமறைமுடிக் கண்ணே

அமர்ந்தபேர் ஆனந்த நிறைவே தரும்பர போக சித்தியும் சுத்த

தருமமும் முத்தியும் சார்ந்து விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி

விநாயக விக்கினேச் சுரனே

- மூன். திருமுறை. சித்திவிநா. பதிகம்.12

என்ற வள்ளற் பெருமான் வாக்கால் வணங்குகின்றோம்.

அடுத்து, கண்ணன் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமானை,

1. Sri Swami Narayana Mandir 2. நான், என் துணைவி, அரவிந்தன், இரண்டாவது பேத்தி, அனுபமா. 3. இத்திருக்கோயிலில் ஞாயிறுதோறும் பசனையும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெறுமாம்.