பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ◆ என் அமெரிக்கப் பயணம்


கொக்கு வகைகள்; இவை சற்றும் பெரியவை; இவை இறகுகளை விரித்தால் 6½ அடி அகலம் இருக்கும் என்ற குறிப்பு தரப் பெற்றுள்ளது.

அடுத்து தரை தளத்துக்கு முதல் தளத்துக்கு[1] வருகின்றோம். முதலில் டைனோசரஸ்[2] பகுதியைப் பார்க்கின்றோம். அனைத்துமே எங்கள் கவனத்தைக் கவர்ந்த போதிலும் முக்கியமான சிலவற்றை மட்டுமே ஈண்டுக் காட்டுவேன்.

(1) மலைவிசாரஸ்”[3] என்ற மிகப் பெரிய பல்லியின்”[4] எலும்புக் கூடு: இப்பிராணி ஆயிரம் இலட்சம் (100 மில்லியன்) ஆண்டுகட்கு முன் ஆஃபிரிக்காவில் இருந்ததாம். இதன் நீளம் 35 அடி. இதன் உணவு தாவர வகைகள்”[5]

(2) மிகப் பெரிய முதலையின்’[6] எலும்புக் கூடு: இந்த முதலை 1100 இலட்சம் (110 மில்லியன்) ஆண்டுகட்கு முன்னர் ஆஃபிரிக்கா - சகாரா பாலைவனத்தில் சதைப் பிடிப்புடன் வாழ்ந்த முதலையாகும்.

(3) மிகப் பெரிய முதுகெலும்புடன் கூடிய ஒரு இராட்சதப் பல்லியின் எலும்புக் கூடு: வட அமெரிக்காவில் 115-100 மில்லியன் (1 மில்லியன் = 10 இலட்சம்) ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த பிராணியாகும். இது 37 அடி (11 மீட்டர்) நீளமுள்ளது. இது பல சிறு பிராணிகளைக் கொன்று உண்டதாக சொல்லப் பெறுகின்றது.

(4) பா. பா நகரும் பிராணி'[7]யின் எலும்புக் கூடு; இது தசையுடன் இருக்கும் போது இதன் நீளம் 6 மீட்டர். இதுவும் வட அமெரிக்காவில் (100-97) மில்லியன் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப் பெறுகின்றது.

(5) கொடுமையான பல்லி[8]"யின் எலும்புக் கூடு: இதுவும் வட அமெரிக்காவில் இருந்து வந்த மிகப் பெரிய பல்லி, தசையுண்ணும் பிராணி, இதன் பொதுப் பெயர் டி-ரெக்ஸ்”[9] என்பது. 650 இலட்சம் (65 மில்லியன்) ஆண்டுகட்கு முன் வாழ்ந்த மிகப் பெரிய பிராணியாகும். இதன் நீளம் 12 மீட்டர் ஆகும்.

இவற்றைப் பார்த்த நிலையில் சிறிது தூரம் நடந்து வரும் போது பெரிய யானையின் எலும்புக் கூடு நம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த யானையின் எலும்புக் கூடு என்பதாகத் தெரிவிக்கப் பெற்றது. அடுத்து ஒர் அறையின் முன் வாயிலின்


  1. 6. First Floor
  2. 7. Dinosaurs section
  3. 8, Malaivisaurus
  4. 9. Lizard 1
  5. 10.plants
  6. 11. Super Crocodile
  7. 12. Paw-Paw-Reptile
  8. 13. Pyrout Lizard
  9. 14. T-rex