பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ♦ 129

தலைப்பில் “வரலாற்றுக் காலத்துக்கு முன் டெக்ஸாஸ்”[1] என்ற பெயர் பொறிக்கப்பெற்றிருந்தது. ஒரு பையன் ஆஃபிரிக்கன் சபாரி’[2] என்ற படம் இந்த அறையில் போடப் போகிறார்கள் அதைப் பார்க்கலாம்” என்ற தகவல் தந்தான். அதனால் அந்த அறையில் நுழைந்து அந்தப் படத்தைக் கான வாய்ப்பு ஏற்பட்டது. கலைமான்கள் முட்டி மோதிப் போரிட்டுக் கொண்டிருந்த காட்சிகள் விருந்தாக அமைந்தன. படத்தில் கண்ட காட்சிகள் யாவும் இன்று டெக்ஸாஸில் இருக்கும் நிலையைக் காட்டுவதாகும்.

அடுத்து அறையை விட்டு வெளிவந்து சிறிது தூரம் நடந்து போகும் போது பெரிய இராட்சசக் கடல் ஆமையின் எலும்புக் கூடு ஒன்று நம் கண்ணில் பட்டது; அது நமக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. அடுத்து ‘ஹீத் மாஸாஸெளர்’[3] என்ற பெரிய பிராணியின் எலும்புக் கூடு ஒன்றைக் கான முடிந்தது. தசையுடன் கூடிய இப் பிராணி 32 அடி நீளம் உள்ளது என்பதை அறிந்து வியந்தோம்.

அடுத்து தரை தளத்தில் பாலூட்டும் பிராணி வகைகளின்[4]” பண்படுத்தப் பெற்ற”[5] உருவங்களைப் பார்த்தோம். அவற்றை ஈண்டுத் தருகின்றோம்.

(1) கொயோட்டி’[6] என்ற பிராணி.இது பார்ப்பதற்குநரி போன்றிருந்தது. சிறிய உருவம் கொண்டது. 38 அங்குலம் நீளமுடையது; 15 கிலோ எடை கொண்டது. (2) வெள்ளை வால் மான். இங்கு நாலைந்து உருவங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன. (3) எல்க்’[7] என்ற பிராணி. இது பார்ப்பதற்கு பெரிய கொம்புகளையுடைய கலைமான் உருவம் போல் அமைந்திருந்தது.6½ அடி நீளமுடையது. (4) முயூல்'[8]- இது ஒரு வகை மான். கண்ணைக் கவர்ந்தது. (5) ஒட்டர்’[9] - இப்பிராணி கீரிப் பிள்ளை மாதிரி தென்பட்டது. (6) நாய் வகைகள் - காட்டு வகை நாய்கள் இவை பயங்கரத் தோற்றத்தை அளித்தன. (7) எலி - பெட்டிக்குள் பல எலிகள் அடைக்கப் பெற்றிருந்தன. (8) கபில நிற 5 நாய்கள் ஒரிடத்தில் இருந்தன. இவை அறிவுள்ள சமூகப் பிராணிகள். கூடி வாழ்வன; சேர்ந்தே வேட்டையாடும். பெரிய உருவமுடைய பிராணியையும் கொன்று விடும்.

காட்டுப் பிராணிகள் [10]உள்ள பகுதிக்கு வருகின்றோம். இங்கு பார்த்தவற்றை ஈண்டு தருகின்றேன்.


***

  1. 15. Prehistoric Texas
  2. 16. African Safari
  3. 17. Heath Masasaur
  4. 18. Marramais
  5. 19. Stuff
  6. 20. Coyote
  7. 2 1 . Eik
  8. 22. Mule
  9. 23. Otter
  10. 24. Wild animals