பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 133

ஏறிக் கொண்டோம். அமெரிக்கப் பெண்மணி ஒருத்தி காட்சிகளை விளக்கம் கூறிய நிலையில் ஊர்தி மெதுவாகச் சுற்றி ஒடத் தொடங்கியது.

அம்மையாரின் விளக்கத்துடன் நாங்கள் கண்டு மகிழ்ந்தவை. (1) ஒகாபி': மத்திய ஆஃபிரிக்காவில் வெப்ப மண்டல மலைப் பிரதேசத்தில் வாழ்வது. உணவு இலை வகைகள், மெதுவான தாவர வகைகள், பழ வகைகள் முதலியவை. தன் இனத்தைச் சார்ந்த மற்றொரு பிராணியைக் காணும்போது சூப்’ என்று ஒலியைக் கிளப்பும், இஃதை ஒட்டைச் சிவிங்கி இனத்தைச் சேர்ந்ததாகச் சொல்வர்.

(2) ஃபிளாமிங்கோ': இப் பிராணி நீண்ட கழுத்தையும், காலையும் கொண்டது.நீரில் முகத்தை ஆழ்த்திக்கொண்டு (20 வினாடி) புழு, பூச்சிகள், பாசான்கள் முதலியவற்றைத் தின்னும், குளிர் காலங்களில் வெப்பப் பகுதிகளை அடையும்.

(3) புஷ்டுய்க்கர்": மான் வகையைச் சார்ந்தது. அடர்ந்த முடியையும் நீண்ட காதுகளையும் கொண்டது. கபில நிறம் முதல் சிவப்பு-மஞ்சள் நிறமுடைய மேற்புறத்தையும் அடி வயிறு வெள்ளை நிறத்தையும் கொண்டது. (4) கொம்புடைய ஒரு வகைப் பிராணி': பாலைவனங்களில் பாறைப் பகுதிகளிலும் காணப்படுவது. இங்ஙனம் இருப்பதால் தன் உடலிலுள்ள நீரின் அளவைக் காப்பது. பெரும்பாலும் வேர்க்காது.இந்த இனம் இப்போது அருகிக் கொண்டே வருகின்றது.

(5) நெருப்புக் கோழி” பறவை இனங்களில் மிகப் பெரியது. நீண்ட கழுத்தையும், சிறிய தலையையும் உடையது. கனத்த உடலையும், நீண்ட சதையுடன் கூடிய கால்களையும் கொண்டது. இறக்கைகள் சிறியவை; அவை தளர்வுடன் அமைந்த சிறகுகள்” கொண்டவை. பறவை இனங்களிலேயே இரண்டு பிரிவுகளையுடைய பாதங்களைக் கொண்டிருப்பதால் இது தனித் தன்மையுடையது. பறப்பதற்கு பருத்த உடலைக் கொண்டிருப்பினும் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்துடன் ஒடக்கூடியது. (படம் - 44)

(6) வரிக் குதிரை": இது பெரும் பகுதி புல்லையும், சிறு பகுதி இலைகளையும் பூக்களின் முகைகளையும் உண்ணும். உடலில் கறுப்பு வெள்ளைக் கோடுகள் காணப்பெறும்.

(7) ஒரு வகை மனிதக் குரங்கு இது பகல் நேரமெல்லாம் பழ வகைகள், இலைகள், பூக்கள், விதைகள் முதலியவற்றை உண்ணக்கூடியது. சில சமயம்

11. Okapi 12. Flamingo 13. Bush Duiker 14. Scimitar-horned oryx 15. Ostrich 16. Feathers

17. Zebra