பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 0 என் அமெரிக்கப் பயணம்

இவை கும்பலாக இணைந்து சென்று குரங்குகள், சிறிய பறவைகள் முதலியவற்றையும் கொன்று தின்னும் இயல்புடையவை. வயது வந்த இப் பிராணி தினந்தோறும் தான் தங்குவதற்கேற்ற வலை அமைப்பை உண்டாக்கிக்கொள்ளும். இது பல்வேறு வகைப் பேச்சுகளை உண்டாக்கிக் கொள்ளும் இயல்புடையது.

(8) மான்டிரில்": இதுவும் ஒரு வகைக் குரங்காகும். இவை கூட்டமாக அடர்ந்த மலைப் பிரதேசங்களில் வாழும். பகல் நேரத்தின் பெரும் பகுதியை பழங்கள், விதைகள், முட்டைகள், சிறிய பிராணிகள் முதலியவற்றைத் தேடுவதிலே கழிக்கும். இரவு வந்ததும் பாதுகாப்பிற்கு மரத்தின் மேல் ஏறிக் கொள்ளும். ஆண் வகை மிகவும் ஈர்க்கக்கூடிய வண்ண முகத்தையும், மூக்கையும்”, நீலநிற’ மஞ்சள் நிறத் தாடியையும் கொண்டது. இது பிற பிராணிகளின் முன்னிலையில் தன் துணிவின் தனித் தன்மையை உணர்த்தக்கூடியது.

இருப்பூர்தி இறங்கும் இடத்தை அடைந்ததும் சக்கர நாற்காலிகளை உரியவரிடம் சேர்ப்பித்து வீடு திரும்புகின்றோம். இப்போது பிற்பகல் மணி மூன்று. இந்திய உணவு விடுதியில் உணவு கொண்டோம். பல்வகை உணவு வகை 9 டாலர்; நேரில் கேட்பது 7 டாலர். மொத்தம் வரியுடன் 50 டாலர் செலுத்தி வீடு வந்து சேரும்போது மாலை 5 மணி.

5. தாவரங்கள் வளர்க்கப்பெறும் இடம்

இதிலும் ஒன்றுதான் பார்க்க முடிந்தது. பார்த்த வரையிலும் நிதானமாக நன்றாகப் பார்த்து மகிழ்ந்தோம்.

பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வகைத் தாவரங்கள் வளர்க்கப்பெறும் இடம்': மே மாதம் - 15 (புதன்) முற்பகல் 10 மணிக்கு என் பேத்தி மிருனாளியின் இல்லத்திலிருந்து சுமார் 20 கல் தொலைவிலுள்ள மேற்கண்ட இடத்திற்குக் காரில் புறப்பட்டோம். காரை சற்றுத் தொலைவிலுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

இந்தத் தோட்டம் பற்றிச் சில சொற்கள். இன்று இருப்பது போன்ற நிலையில் இது 1982-இல் நிறுவப் பெற்றது. இன்று இது உலகோரைக் கவரும் தகுதியைப் பெற்றுள்ளது. இஃது ஆண்டுதோறும் 350,000 எண்ணிக்கைக்குக் குறையாத பேர்களைக் கவர்வதாக உள்ளது. இவர்களில்

18, Mandril 19. Scariet 20. Flangas 1. ARBORETUM 2. Dallas Tx 75.254. நான், என் துணைவி, என் பேத்தி அனுபமா, அரவிந்தன்