பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 135

அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களைத் தவிர வெளி நாட்டிலிருந்து வருவோரும் அடங்குவர். வயது வந்தவர்கட்கு சக்கர நாற்காலிகள் உண்டு; இலவசம். அவர்களுடன் சேர்ந்து வருவோர் அவற்றைத் தள்ளிக்கொண்டு செல்லலாம். இவை தவிர 12 பேர் உட்காரும் Tram வண்டியும் உண்டு; பொறியமைப்பால் இயக்கப் பெறுவது. இதனையும் முதியோர், ஊனமுற்றோர் இவர்கட்காகக் கேட்டால், வண்டியோட்டியால் இந்த வசதி அளிக்கப்படும்.

தோட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கேற்றவாறு ஒரு குறிப்பிட்ட முறையில் நடைபாதை அமைக்கப் பெற்றுள்ளது. பாதை நல்ல சீமைக் காரையாலும், சில இடங்களில் பலகைக் கற்களாலும் அமைக்கப் பெற்றுள்ளது. ஏற்றஇறக்கமான இடங்களில் படி அமைப்பு வசதிகள் உள்ளன. சுற்றிவரும் பார்வையாளர்கள் அயர்ச்சியால் களைத்துப் போகும்போது அமர்வதற்கு பலவிடங்களில் ஆங்காங்கு மரத்தாலான பெஞ்சுகளும், இரும்புத் தகட்டால் பின்னப்பெற்ற பெஞ்சுகளும் உள்ளன. இவற்றுள் பல நன்கொடையாளர்களால் வழங்கப் பெற்றவை; இவற்றில் வழங்கினவர்கள் பெயர் பொறிக்கப் பெற்றிருக்கும். (படம் - 45)

முதியோர்களான எங்களுக்காக இரண்டு சக்கர நாற்காலிகள் வாங்கப்பெற்றன. ஒன்றை என் பேத்தி அனுபமாவும், மற்றொன்றினை அரவிந்தனும் தள்ளிக்கொண்டு போவார்கள். நாற்காலிகளிலிருந்த வண்ணம் பார்த்துக்கொண்டே பல இடங்களைப் பார்வையிட்டோம்-மகிழ்ந்த வண்ணம். அன்று வெயிலும் சற்று அதிகமாக இருந்தது. எங்களுக்கும் சோர்வு வந்து விட்டது. ஒர் இடத்தில் எங்களை இறக்கி சற்று உயரமான இடத்தில் இருந்த பெஞ்சில் அமரச் செய்துவிட்டு என் பேத்தியும், அரவிந்தனும் சில இடங்களைப் பார்க்கச் சென்றனர்.

சில மணித் துளிகளில் திரும்பி வந்து மேலும் சில இடங்களைக் காட்ட நாற்கலிகளில் தள்ளிக்கொண்டே சென்றனர். பல இடங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். பல்வேறு மர வகைகளும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. ஒரிடத்தில் பூச்செடிகளின் அடர்த்தியான நிலை எங்கள் கண்ணுக்கும், கருத்திற்கும் நல் விருந்தாக இருந்தது. என் பேத்தி அந்தக் காட்சியில் சொக்கி அதன் நடுவே சென்று உட்கார்ந்து விட்டாள். இங்கேயே இருந்து விடலாம் போல் உள்ளதே! என்று சொல்லியவண்ணம் அனுபவித்து மகிழ்ந்தாள். சில மணித் துளிகள் கழித்து எழுந்தாள். வேறு இடங்களுக்குச் சென்றோம். (படம் - 46)

3. கட்டண விவரம் வயது வந்தோர் 6 டாலர் முதியோர் (65-) 5 டாலர் சிறுவர் (3-12, 3 டாலர்; (2,

2-க்குக் கீழ் இலவசம்). கார் நிறுத்த 3 டாலர்