பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 0 என் அமெரிக்கப் பயணம்

வினைவழி சென்று கொண்டுள்ளோம். அந்த வினையே பிராரப்தம்’ எனப்படும் நுகர் வினையே - என்னை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இனி இந்த நுகர்வினை என்னென்ன செய்யும் என்பதை இப்போது உறுதி செய்ய முடியாது. நடக்க நடக்கத் தான் அது தெரியும். இனி, பேச்சுக்கு வருகின்றேன்.

உலக மக்கள் அனுட்டித்து வரும் சமயங்கள் பலவற்றில் வைணவமும் ஒன்று. திருமால் வழிபாடு நினைப்பிற்கெட்டாத நெடுங்காலமாக நடைபெற்று வரினும் வைணவத்தை சமயமாக தத்துவ நெறி அடங்கிய சமயமாகச் செய்தது. இராமாநுஜர் என்னும் மகான் 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்தவர். ரீ பெரும்புதூர் என்ற சிற்றுாரில் பிறந்து பிறகு காஞ்சியில் வாழ்ந்து யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் கல்வி கற்று வந்தவர். தம் வாழ்நாளின் பெரும் பகுதியை திருவரங்கத்தில் (திருச்சி மாவட்டம், திருச்சிக்கு அருகில் உள்ளது; கோயில்” என்று வழங்கப் பெறுவது) கழித்தவர். திருவரங்கக் கோயில் வழிபாட்டு முறைகளை கோயில் ஒழுகு’ என்ற நூலிலும், திருமலை வேங்கடவன் வழிபாட்டு முறைகளை திருமலையொழுகு’ என்றநூலிலும் நெறிப்படுத்தி வழங்கியவர்.நம்மாழ்வார் அருளிச் செயலாகிய திருவாய்மொழி கலவாத வழிபாடு இல்லை என்று அனுதாபப்பட்ட பெருமை இவருக்கு உண்டு.இவரே தமிழ் வழிபாட்டிற்கு வித்திட்டவர் என்றும் சொல்லி வைக்கலாம்.

(1) இவர் திருக்கோட்டியூர் நம்பி என்ற ஆசாரியப் பெருமகனாரிடம் திருமந்திர உபதேசம் பெற்றது வரலாற்றுப் புகழ் பெற்றது. திருமந்திரம் என்பது ‘ஓம் நமோ நாராயணாய என்னும் வைணவ மந்திரம். திருவரங்கத்திலிருந்து 60 கல் தொலைவிலுள்ள திருக்கோட்டியூர் சென்று பெற்றது இது. 17 தடவை நடக்க வைத்து இழுத்தடித்து 18-வது தடவையில் உபதேசம் பெற்றது. இம்முறை நம்பி தனியாக வருமாறு பணித்தார். அதற்கு இராமாநுசர், “நான் துறவி, கூரத்தாழ்வான் கமண்டலம் முதலியாண்டான் திரிதண்டம், நாங்கள் மூவரும் வருவோம்” என்று விநயமாக வேண்டினார். நம்பியும் அதனை ஒப்புக்கொண்டு சொன்னது. இம்மந்திரத்தை ஒருமுறை சொன்னாலே வீடுபேற்றை அளிக்கும். நம்பிக்கை இல்லாத பிறருக்குச் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் உங்கட்கு நரகம்தான் கிடைக்கும்” என்ற எச்சரிக்கையுடன் உபதேசித்தார். கருணையே வடிவாகவுள்ள இராமாநுசர்

5. வினை. சஞ்சிதம் - பழவினை, பிராரப்தம் - நுகர் வினை, ஆகாமியம் - எதிர் வினை என்று

மூவகைப்படும்.

6. சைவப் பெருமக்கள் சிதம்பரம் (தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது.) என்னும்

திருத்தலத்தைக் கோயில் என்று வழங்குவது ஈண்டு நினைவுகூரத் தக்கது.

7. காரைக்குடிக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது.