பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆151



மணவாளப் பெருமாளரையர் பட்டர் நிர்வாகம் இப்படியல்லவா ? என்று நினைப்பித்தாராம். அது இது மலை மீதுள்ள காடுகளில் சிறுவனாகிய கண்ணன் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது இளங்கன்றுகள் அங்குள்ள பெரிய தடாகங்களில் நீர் அருந்தப் போகும்போது நீரில் முன்னே இறங்கிக் குடிக்க அஞ்சுமாம். அப்போது அக்கன்றுகட்கு நீர் அருந்தும் விதத்தைப் பழகுவிப்பதற்காகக் கண்ணன் தன் முதுகில் கைகளைக் கட்டிக் கொண்டு கவிழ்ந்து நின்று தண்ணிரமுது செய்து காட்ட எல்லாக் கன்றுகளும் நீர் பருகுமாம். இச்சொற்றொடரில் வரும் கருமுகில் என்பது கண்ணன். இது கண்ணன் செயலைக் குறிப்பிடுவதாகக் கூறுவாராம் பட்டர்.

(12) வாழையிலையில் நடுத்தண்டு:இது பற்றிய குறிப்பு ‘வாதமாமகன் மர்க்கடம்’ (பெரி. திரு. 5.8:2) எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கம் பற்றி அருளிய பாசுரத்தில் வருவது.

வாதமாமகன் மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்த கவினுக் கில்லைகைம் மாறென்று
‘கோதில் வாய்மையி னானொடும் உடனே
உண்பன் நான்’ என்ற ஒண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும்.


(வாதம் - வாயு தேவன்; மர்க்கடம் - குரங்கு ஆதரம் - ஆசை, தகவு - உபகாரம்; கோது - குற்றம்; உடனே உண்பன் - உடனிருந்து உண்பேன்; ஒண் பொருள் - சிறந்த பொருள்)

என்ற அடிகளில் உள்ளது இக் குறிப்பு. இராமபிரான் அநுமனுடன் ஒக்க உண்ட வரலாறு இதில் உள்ளது. (வாஸிஷ்ட இராமாயணம்). முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையிலுள்ளது போல் இடை நரம்பு இல்லை. இப்பொழுது இராமன் அதுமனை தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன் உண்ணுமாறு அவ்விலை நடுவில் தன் கையினால் ஒருவரையறை கீறினாராம். அதுவே இன்றைய வாழை இலைகளில் நரம்பாக அமைந்து விட்டதாம். விலங்கையும் அதன் இழிவு பாராமல் ஆட்கொண்டு அதன் பக்கல் சிறப்பான கருணை செய்த பாங்கு இப்பாசுரத்தில் வருகிறது. அங்ஙனமே இழிவு பாராமல் தம்மையும் ஆட்கொள்ளப் பேரருள் புரிய வேண்டும் என வேண்டுகின்றார் ஆழ்வார்.

(13) ‘திருநறைர்யூத் தேனே’ (பெரி. திரு. 6.3 : 3) இத் தொடர் திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் சந்நிதி) மானேய்நோக்கு நல்லார்’ என்ற