பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ◆ என் அமெரிக்கப் பயணம்

 நங்கையார். அவ்வளவு நெல்லையும் குத்தித் ததியாராதனை செய்தார். மறுநாள் கணவர் வந்து விதைத் தானியம் ஒன்றுமில்லாமையைக் காண்கின்றார். “நெல் எங்கே?” என்று வினவுகின்றார். நங்கையார் “பரமபதத்தில் விளைவதாக வித்தினேன்” என்கின்றார்.இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை ஆழ்வாருடைய மங்களாசாசன பலத்தினால் அமைந்தது என்று நினைந்து மகிழ்கின்றோம்.

(20) மலர்களின் உயர்வு தாழ்வுகளை நோக்காது அன்பினையே நோக்கும் இறைவன்: ‘கள்ளவிழும் மலர்இட்டு’ (திருவாய், 9.10 2) என்ற திருவாய்மொழி பாசுரத்தில் வருவது. இதற்கு ஈட்டாசிரியர் காட்டும் ஐதிகம் இன்சுவை மிக்கது.

ஸ்ரீபுருசோத்தமம் என்பது ஒரு வட நாட்டு திவ்விய தேசம், அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்குச் செண்பகப்பூ ஆரத்தைச் சாத்துவது வழக்கம். இறைவனுக்கு பூக்கள் இனத்தைச் சார்ந்த அனைத்தும் அமையும் என்ற உண்மை ஒரு புறம் இருக்க மக்கள் ஏனோ இப் பெருமானுக்கு அந்தப் பூ சிறந்தது என்று நினைத்துக்கொண்டார்கள்.

ஒரு நாள் சில அரச குமாரர்கள் அப்பூவைத் தேடிப் பூக்கடைக்கு வருகிறார்கள். மிகவும் தாமதித்து வந்ததனால் பூக்கள் யாவும் விற்றுத் தீர்ந்தன. எப்படியோ ஒரு பூ இருக்கக் கண்டார்கள். செல்வச் செருக்கால் அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து ஒருவன் அதனை வாங்கிக் கொண்டு வந்து சாத்தினான். அன்று இரவில் அவன் கனவில் “நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்கவில்லை” என்று அருளிச் செய்தான் என்பது வரலாறு. அன்பினால் சாத்தும் பூ மட்டிலுமே அவனுக்குக் கனக்கும் என்பதைக் காட்டவந்த வரலாறு இது.

(21) கடியுண்ட பாம்பு வலிதாகியதாகில் கோனேரியில் தீர்த்தமாடி நின்னைச் சேவிக்கிறேன். இந்த வரலாறு “ஒழிவில் காலமெல்லாம் உடனாய்” (திருவாய் 3.3 :1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் வருவது. ‘வழுஇலா அடிமை செய்ய வேண்டும். நாம் தெழில்குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி தந்தைக்கே என்ற தொடர்களில் இந்த வரலாறு அடங்கியுள்ளது.

முதலில் ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்பதற்கு ஒரு நயம் காட்டுவேன். நீலாழிச்சோதி வானார் சோதியையும் (பரமபதநாதன்), நீலாழிச்சோதியையும் (பாற்கடல் நாதன்) வேறுபடுத்திக் காட்டவே இவ்வாறு கூறினார். வானார் சோதி பகல் விளக்குப் பட்டிருக்கும்; நீலாழிச் சோதி கடல் கொண்டு கிடக்கும்; வேங்கடத்து எழில் கொள் சோதி குன்றத்திட்ட