பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 ◆ என் அமெரிக்கப் பயணம்


“தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்ற இரண்டாம் அடியையொட்டிவருவது. வங்கிபுரத்து நம்பி என்ற அடியார் பெருமாளைச் சேவிக்க எழுந்தருளினபோது ஒரு பக்கத்தில் சிரீ வைணவர்களும் மற்றொரு பக்கத்தில் ஆய்ச்சிகளும் நின்று கொண்டு பெருமாளைச் சேவித்துக் கொண்டிருந்தார்கள். நம்பி சிரீ வைணவர்கள் நிற்கிற பக்கத்தில் நில்லாமல் ஆய்ச்சிகள் நிற்கின்ற பக்கமாக நிற்கின்றார். இதனை முதலியாண்டான் கண்டு, “அன்பரே, சிரீ வைணவர்கள் திரளில் சேராமல் ஆய்ச்சிகள் நிற்கின்ற பக்கமாக நிற்பது ஏன்?” என்று கேட்டார். அதற்கு நம்பி சொன்னது: “எந்த வகையிலும் நாம் பல வகை அபிமானம் கொண்டு அகங்கார மககாரம் கொண்டவர்களாக இருப்போம்; நம்மேல் பகவத்கடாட்சம் பாய்வது மேட்டு மடையாக இருக்கும். அறிவொன்றும் இல்லாத ஆய்ச்சியர்களாகையால் உண்மையில் தாழ்ச்சியுடையவர்களாயும் தாழ்ச்சி தோற்றப் பேசுபவர்களாயும் இருப்பவர்கள். ஆதலால் பகவத் கடாட்சம் பாய்வது பள்ளமடையாக இருக்கும்; அதனால் தான் அவர்கள் பக்கமாக நின்றேன்” என்றார்.

எம்பெருமானை நோக்கி ஆய்ச்சிகள் போற்றும் படியையும் நம்பி போற்றும் படியையும் ஆண்டான் நன்கு கண்டவர். ஆதலால் இருவர் பக்கமும் உள்ள வேற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். நம்பியை நோக்கி அவர் கேட்டது: “ஆய்ச்சிகள் என்ன சொல்லி எம்பெருமானைப் போற்றினார்கள் ? தேவரீர் எங்ஙனம் போற்றினிர்கள் ?” என்பதாக, அதற்கு நம்பி சொன்னது: “பொன்னாலே பூணூலிடுவீர், நூறு பிராயம் புகுவீர், பால் உண்பீர், பழம் உண்பீர் என்பன போன்று ஆய்ச்சிகள் சொல்லி வணங்கினார்கள்; அடியேன் விஜயஸ்வ, விஜயீபவ என்பன போன்று சொல்லிப் போற்றினேன்” என்று. இவற்றைக் கேட்ட ஆண்டான் “அங்குப் போயும் முரட்டு சமஸ்கிருதத்தை நீவீர் விட்டபாடில்லையே; எங்கிருந்தாலும் நாம் நாமே; அவர்கள் அவர்களே. இப்பக்கமாகவே எழுந்தருள்வீர்” என்று அருளிச் செய்தார்.

இங்ஙனம் பல சுவையான நிகழ்ச்சிகள் வைணவ உரைகளில் காணப் பெறுகின்றன. அன்பர்களே, இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளைக் கூறி என் பேச்சை முடிக்கிறேன்.

(23) மிளகாழ்வான்: இராமாதுசரின் சீடன் ஒருவன் பரிசாரகன். அவன் தயாரிக்கும் பொங்கல் அமுதில் மிளகை உடைக்காமல் அப்படியே போட்டுக் கொண்டு வந்தான். ஒரு நாள் உடையவர் ‘மிளகை உடைத்துப் போட்டால் சுவையாக இருக்கும்; அங்ஙனம் செய்க என்று சொல்ல அதற்கு அவன் “தேவதாந்திரத்தைத் தொடாமல் இருக்கவே இங்ஙனம் செய்து