பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஃபிலடெல்ஃபியா மாநிலத்தில் உள்ளது

நயாகரா அருவிகளைப் பார்க்கும் திட்டம் மிகக் கடினமானது. 430 கல் தொலைவு கடந்துவர வேண்டும். பயண நேரத்தைக் குறைக்கவும் சிரமத்தைக் குறைக்கவும் இம்மாநிலத்தில் உள்ள திருவேங்கடவன் திருக்கோவில் சேவையை நிறைவு செய்துகொள்ளத் திட்டமிட்டோம். எங்களை இரண்டு நாட்கள் தம் வீட்டில் வசதிகளுடன் தங்கச் செய்து அன்புடன் விருந்தோம்பி உபசரித்த டாக்டர் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்படுகிறோம். (படம் - 57)

திருவேங்கடவன் (மலைத்) திருக்கோயில்!!

கோவிலைச் சேவிப்பதற்கு எங்கள் நண்பர் டாக்டர் தனஞ்செயன் இல்லத்திலிருந்து (பஃபலோநகர்) அக்டோபர் 2 ஞாயிறு அன்று காலை 6.45க்குப் புறப்பட்டோம் எங்கள் காரில். எங்கள் நண்பர் தம் உறவினர் ஐவருடன் தனிச்சிற்றுந்தில் பின் தொடர்ந்தார். வழியில் ஒரிடத்தில் (பயணிகள் நிறுத்தித் தங்கும் இடம்) காரை நிறுத்தி நானும் என் துணைவியும் சிற்றுண்டி கொண்டோம். 250 கல் தொலைவு கடந்து திருக்கோயில் உள்ள இடத்தை அடைந்தோம். ஏதோ கூட்டம் சற்றுக் குறைவாக இருந்தமையால் கோயில் அருகிலேயே கார் செல்ல வாய்ப்பாக இருந்தது. காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு அடியார்கள் ஒய்வாக உள்ள இடத்தில் நடையன்களையும் காலணிகளையும் வைத்துவிட்டு’ திருக்கோயிலில் இறைவன் சந்நிதியை அடைகின்றோம். அப்போது இறைவனுக்கு அபிஷேகம் (திருமுழுக்கு) நடைபெற்றுக் கொண்டிருந்தது. மந்திர சுலோகங்கள் ஒலித்ததைக் கேட்டவண்ணம் சிலநேரம் அங்கு அமர்ந்து அவற்றைச் செவிமடுத்து நுகர்ந்தோம் (12-30 மணிவரை).

என் மகன் இரண்டு கல்யாண உற்சவங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தான். திருக்கல்யாண உற்சவங்கள் திருக்கோயிலின் திருச்சுற்றில் (பிராகாரம்) ஒரிடத்தில் நடைபெற்றது. இறைவன் பக்கத்திற்கு ஒரு தேவிகள்

1, Sri Venkateswara Temple Post Box 17280 Pittsburg P.A. 15235. Qg5 Qusirfisa வேனியா மாநிலத்தில் உள்ளது. இத்திருக்கோயில் பிட்ஸ்பர்க் நகரில் இல்லை. Penn Hill என்ற இடத்தில் மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

2. Van 3. Sandals and Shoes.

இந்த இடத்தில் ஒப்பனை வசதிகளும் (Toilets) உள்ளன.

5. கட்டணம் ஒன்றுக்கு 35 டாலர்.

4.