பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்கத் தலைநகரில் உள்ளவை 169

(2) காற்று மண்டல் - விண்வெளி அருங்காட்சியகம் மிகப்பெரிய ஸ்மித்தோனியன்’ அருங்காட்சியகத்தில் நாட்டின் காற்று மண்டல இயக்கம்’ பற்றிய அனைத்துத் தகவல்களும் அடங்கியுள்ளன. ரைட் சகோதரர்களின் (Wright Brothers) 1903-6r ut Lub (Fly), slsrt. Glusiefilsr (Lindbergh) புனித லூயியின் ஆவி (The Spirit of St. Louis) போன்றவை கோள்கள் பற்றிய ஆய்வு முறை, காற்று மண்டலத்தில் பறக்கும் வரலாறு, விண்வெளிப் பயணம் முதலியவை பற்றிய நிரந்தரக் காட்சிப் பொருள்கள் அவற்றுள் சில. பார்வையாளர்கள் வான ஆய்வகத்தில் புகலாம். அம்புலிப் பாறையைத் தொடலாம், அருங்காட்சியகக் கடையில் விண்வெளிவீரர் பனிப்பாலாடை வாங்கலாம்.

பொருள்கள் எப்படிப் பறக்கின்றன? என்ற காட்சிப் பொருள் காற்று மண்டல இயக்கம் பற்றிய விதிகளை ஆய்கிறது; விண்வெளிப் பந்தயம் என்ற காட்சிப் பொருள் அரை நூற்றாண்டுக் காலம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இரஷ்யா இடையே நடைபெற்று வந்த விண்வெளிப்போட்டியைச் சுட்டிக் காட்டுகிறது; வான் பயணம் நமது கதிரவ மண்டலவழிப் பயணம் என்ற காட்சிப் பொருள் அருங்காட்சியகத்தின் வெளியே யெபார்சன் தெருவில் கதிரவ மண்டலப் பயணத்தை நடந்துகொண்டே பார்ப்பதாக அமைந்தது என்பன போன்றவற்றைக் கண்டு மகிழலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்: விண்வெளி நாள் என்பது ஜான் கிளென் (John Glenn) என்ற விண்வெளி வீரர் நாள் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளைக் கொண்டாடிக் கொண்டிருப்பார். மே-2; முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. சார்லஸ் ஏ லிண்ட்பர்க் நினைவுச் சொற்பொழிவு என்பது. ரீவ் லிண்ட்பெர்க் (பென்) என்பார் மிகு புகழ்பெற்ற தமது தந்தையார் அட்லாண்டிக் மாக்கடலின் குறுக்கே தனிமையாகப் பறந்து சென்ற நிகழ்ச்சியை 75-வது ஆண்டு விழாவாகக் கொண்டாடுவதாகப் பேசுவது. மே-23: இரவு 8 மணி. இவற்றையெல்லாம் கட்டணம் இன்றி இலவசமாகக் கண்டு மகிழலாம்.

som sgrifil uairilsir ggunrsu (Lockheed Martin IMAX Theatre) என்ற விண்வெளி நிலையத்தில் டாம் குரூய்ஸ் (Tom Cruise) என்பார்

1 1846 இல் 500,000 டாலர் செலவில் ஏற்படுத்தப்பெற்ற ஸ்மித்தோனியன் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியக complex ஆகும். இது ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithsan) என்ற பிரிட்டிஷ் அறிவியலறிஞரால் விருப்பார்வ ஆவணத்தின் மூலம் வழங்கப் பெற்றது. இதில் 16 அருங்காட்சியகங்கள் அடங்கியுள்ளன. இதில் தேசிய உயிர்க் காட்சிச் சாலையும் (200) அடங்கும். இவை மில்லியன் செய்திகளை (artefacts), மாதிரிப் பொருள்கள் உயிர்ப்பிராணிகளையும் கொண்டுள்ளன.

2. Flerodynamics 3. Exhibit 4. Space race