பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கத் தலைநகரில் உள்ளவை◆ 173

 (14) கொரியன் போரில் நீண்டகாலப் பணியாளரின் நினைவுச் சின்னம்’:[1]நாட்டின் தலைநகரில் நிறுவப்பெற்ற மிகப்புதிய நினைவுச் சின்னம். கொரியன் போரில் (1950 - 53) பங்குபெற்று உயிர்நீத்த அமெரிக்கப் போர்த்துறையைச் சார்ந்தவர்களைப் பற்றியது. போரில் கொல்லப்பெற்ற இவர்கள் தவறிப்போன அல்லது சிறைபிடிக்கப் பெற்றவர்கள் என்ற தலைப்பில் இவர்களின் பெயர்கள் காட்டப் பெற்றுள்ளன. முதல் ஐ.நா. போரில் பங்குபெற்ற 22 நாடுகளின் பெயர்கள் உயர்த்தப்பெற்ற ஒரு கருங்கல் மேடையில் பொறிக்கப் பெற்றுள்ளன. நாள்தோறும் நியமிக்கப்பெற்ற பணியாளர்களால் முற்பகல் 8 மணி முதல் நள்ளிரவு வரையிலும் திறந்து வைக்கப்பெறும்.

(15) பழைய கல் இல்லம்": [2]இது ஜார்ஜ் டவுன் இல்லம், வாஷிங்க்டனில் மிகப் பழையது. 1755இல் கட்டப்பெற்றது.இது அக்காலக் குடியிருப்புகளுக்குச் சான்றாக அமைகின்றது. ஆங்கிலப் பாணியில் அமைந்த உள்நாட்டுக் காட்சியால் அமைந்த தோட்டம் சிறப்புடன் உண்ணும் இடமாகவும் அரட்டை அரங்கம் நடத்துவதற்கு உகந்ததாகவும் திகழ்கின்றது.

(16) ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நினைவுச்சின்னம்': [3]வளைந்த நிலையில் அமைந்த இந்த நினைவுச் சின்னம் 7.5 ஏக்கரில் அருவிகளமைந்த உள்நாட்டு இயற்கைக் காட்சியுடன் கொண்டது. கலைப் பாங்கும் நடைபாதைகளையும் உடையது.32-வது தலைவருக்கும் அவரது காலத்திற்கும் புகழாரம் சூட்டுவதாகவும் திகழ்வது. வெண்கலச் சிற்பங்களும்’[4], ரூஸ்வெல்ட், அவர் துணைவி எலிநார், அவர் தம் செல்லப்பிராணியாகிய ஃபாலா என்ற நாய் இவர்களைச் சித்திரிக்கின்றன. 24 மணி நேரத்திலும் கிட்டுவனவாக உள்ளன.

(17) ஃபோர்டின் காட்சி அரங்கம்': [5]இங்குதான் ஆப்ரஹாம் லிங்கன் ஏப்பிரல் 14, 1865-இல் கொலை செய்யப் பெற்றார். இந்தக் காட்சியரங்கம் திரும்பவும் கட்டப்பெற்று, காட்சி புதுப்பிக்கப்பெற்று உள்நாட்டுப் போர்த்தலைவரின் உயிருள்ள நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப் பெறுகின்றது. இச்சின்னத்தின்அடிப்பகுதியிலுள்ள அருங்காட்சிப் பகுதி லிங்கனின் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை விளக்குகின்றது; ஆப்ரஹாம் லிங்கனுடையவும், அவர் குடும்பத்தினுடையவும் அவர் காலத்தவருடையவுமான கவர்ச்சிகரமான பொருள்களையும் கொண்டுள்ளது. இல்லமும் அருங்காட்சியகமும் நாடோறும் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைக்கப் பெற்றிருக்கும். வியாழன் மதியத்திலும் ஞாயிறு 2 மணியளவிலும் மூடப்பெறும்.


  1. 23, Korean War Veterans Memorial
  2. 24. Georgetown house
  3. 25. Franklin D. Roosevelt Memorial
  4. 26. Bas - relief
  5. 27. Ford’s Theatre