பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

தாயகமாகிய தமிழகத்தைவிட்டு
பொருளீட்டுவதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகள்
போந்து நன்முறையில் பொருளீட்டி நல்வாழ்க்கை வாழ்ந்து தமிழகத்திற்கு
நற்பெயர் ஈட்டும் அமெரிக்கா வாழ் தமிழன்பர்கள் அனைவருக்கும்

அன்புப் படையல்

கடலினைக் கடந்தும் நாட்டினை மறவாக்
கண்ணியப் புண்ணியம் மிக்கார்;
உடலினை மறவா உயிரெனப் பொலியும்
உத்தமர்; சத்தியத் தூன்றும்
திடனுறும் அன்பர்; திறமையி னாலே
சீர்மைகள் பற்பல பெற்றார்
அடலுறும் அமெரிக் காவினில் வாழும்
அன்பருக் குரியதிந் நூலே.