பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமெரிக்க ஐக்கிய நாடுகள் ♦ 15


மான்காட்டன் கீழ்ப்பகுதி

1. சீன நகர்[1]: இங்கு சீனர்களின் உணவுவிடுதிகளும் கடைகளும் வரிசை வரிசையாக அமைந்துள்ளன. நடைபாதைகளில் கூட விற்போர் கூட்டம் மிகுதியாக இருக்கும்.

2. சுதந்திரதேவியின் சிலை, எல்லிஸ்தீவு[2]

3. நியுயார்க் பங்குசந்தை[3]: இதன் வெளியில் ஒரு மரம் உள்ளது. அதன்கீழ்தான் ஒரு காலத்தில் வணிகர்கள் சந்தை வாணிகம் நடத்துவார்கள் என்பதற்கு இஃது ஒர் அடையாளமாக அமைந்துள்ளது.

4. உலக நிதி மையம்[4]: வாணிகம் நடைபெறும் முக்கிய இடமாகும். இது கொண்டுள்ள உட்புற வெளிப்புறப் பரப்புள்ள இடம் 3,00,000 சதுரஅடி கொண்டது. இதில் 120 அடி உயரமுள்ள வளைவாக அமைந்த கண்ணாடி, உருக்கு இரும்பாலானதும் சலவைக்கல் தரையாலானதுமான குளித்தோட்டம் (Winter Garden) ஒன்றும் அடங்கும். இங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு நான்கு பகுதிகளில் வாணிகம் நடைபெறும். அலுவலகம், சில்லறை வாணிகம் நடைபெறும் இடம், பொதுமக்கள் தங்கும் இடம் உள்ளன. 30,000 பேர் பணி புரிகின்றனர்.

5. உலக வாணிக மையம்[5]: இது 16 ஏக்கர் பரப்புள்ள காம்ப்ளெக்ஸ். அலுவலகம், இயற்கை காட்சி வெற்றிடம் கொண்டது. இங்குள்ள இரட்டை கோபுர அடுக்கு மாளிகைகள் ஒவ்வொன்றும் 110 தளங்களைக் கொண்டவை. உலகிலேயே இவை மிகமிக உயரமுள்ளவை.

107-வது தளத்திலுள்ள காட்சி அமைப்புக்குக்[6] கொண்டு விரைவாக இயங்கும் மின்விசையேற்றங்கள் உள்ளன. இயங்கும் வெட்டவெளிதளங்கள்[7] பார்வையாளர்களைக் கட்டட உச்சியாகிய 110-வது தளத்திலுள்ள மேடைக்கு எடுத்துச் செல்லுகின்றன. உலக உச்சி[8] என வழங்கப்பெறும் பார்வைமேடை[9]யிலிருந்து பெரும் நிலப்பரப்பை தெளிவாகக் காணலாம். கண்ணாடியால் அமையப்பெற்ற 107-வது தளம் மான்காட்டனையே கெலிகாப்டர் பயணமாகக் காட்டிவிடும். மேலும், பல்வேறு மொழிகளாலமைந்த கணினி அமைப்புகள் நியுயார்க் மாநகர வரலாற்றையும், அம்மாநகரின் பல பகுதிகளைப்பற்றியுமான தகவல்களைத் தருவனவாக அமைந்துள்ளன.


  1. China town
  2. இவை இரண்டும் பிறிதோர் இடத்தில் விளக்கப் பெற்றுள்ளன.
  3. New York Stock Exchange
  4. World Financial Centre
  5. World Trade Centre
  6. Observatony
  7. Moving Staircase
  8. Top of the world
  9. Observation deck