பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ♦ என் அமெரிக்கப் பயணம்

3. பார்னெஸ்-நோபிள் புத்தகக்கடை[1]: உலகிலேயே மிகப் பெரிய, புத்தகங்கள் விற்கப்படும் கடை. உள்ளே நுழைந்து பார்த்தோம். புத்தக அடுக்குகள் எங்களை மலைக்க வைத்தன.

4. நகரமண்டபம்[2]: இங்கு தான் நியுயார்க்கின் நகரத்தந்தையின்[3] அலுவலகம் உள்ளது.

5. மிட்டவுன் சுரங்கப்பாதை[4]: இது 1½ மைல் நீளமுள்ளது. மான் காட்டனையும் குயீன்சையும் இணைக்கின்றது. கடலும் கீழாறும் சேரும் இடத்திற்கு அடியில் செல்லுகின்றது.

6. புரூக்லின் பாலம்: மான்காட்டனையும் புரூக்லினையும் இணைக்கின்றது.


  1. Barnas and Noble Bookshop
  2. City Hall
  3. Mayor
  4. Mid Town Tunnel