பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 0 என் அமெரிக்கப் பயணம்

அது போருக்குரிய காரணங்களைத் தேடி ஆராய்ந்து அவற்றை அடியோடு நீக்க வழி வகைகளைக் காண முயலும்.

தன்னுடைய செயற்பாட்டில் ஐ.நா. வெற்றியையும், தோல்வியையும் சந்தித்துள்ளது. பெரும்போரில் கொண்டுவிடும் தகராறுகள் நேரிடா வண்ணம் தடுத்துள்ளது.இந்த நிறுவனம் உலகில் பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்கள் விடுதலை பெறவும், இவர்களிடையே நல்வாழ்வு அமையவும் உதவுகின்றது. ஆனால், உறுப்பு நாடுகளிடையே நேரிடும் கருத்து வேறுபாடுகளும் ஒத்துப் போகாப் பண்புகளும் இதனுடைய பணியை முற்றிலும் சிறப்பாகவும் திறமையாகவும் அமைதியை நிலைநாட்ட முடியாமல் தடுத்து விடுகின்றன. கடுமையான நிதி நெருக்கடிகளும் ஐ.நா.வைப் பலமிழக்கச் செய்துவிடுகின்றன.

முக்கிய அங்கங்கள்-செயற்பாடுகள்

ஐ.நா.வின் ஆறு முக்கிய அங்கங்கள் தன்னுடைய முக்கிய செயற்பாடுகளைக் கொண்டு செலுத்தத் துணை புரிகின்றன.

1. பொதுப் பேரவை": இதுதான் முக்கியமானது; எல்லா ஐ.நா. உறுப்பினர்களும் அடங்கிய அமைப்பு இது விதிகளின்படி எந்த முக்கியமான பிரச்சினையையும் கலந்து ஆலோசிக்கலாம்; உறுப்பினர்களோ, அல்லது ஐ.நா.வின் பிற பகுதிகளோ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்துப் பரிந்துரை செய்யலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்து சார்பாளர்கள்”, பதிலான சார்பாளர்கள்”, தாங்கள் விரும்பும் வரை எண்ணிக்கையுள்ள அறிவுரை கூறுவோர்’ தேர்ந்தெடுத்து அனுப்பலாம். எனினும் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு வாக்கு அளிக்கும் உரிமைதான் உண்டு. ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டத்தில் பேரவை ஒரு தலைவர், பலதுணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும். தலைவர் ஒருவரே கூட்டநடவடிக்கைகளை கவனிப்பார்.

2. பாதுகாப்பு ஆலோசனை அவை": இதுதான் ஐ.நா. வின் முக்கிய பங்காகிய அமைதியை நிலை நாட்டும் பொறுப்பை வகிக்கின்றது. இந்தப் பொறுப்பைச் செயற்படுத்த விதிகள் இதற்குத் தனிப்பட்ட அதிகாரம் நல்கியுள்ளன.

3. செயலகம்': ஐ.நா வின் எல்லாப் பகுதிகளும் தம் கடமைகளை இயன்றவரை மிகத் திறமையாக நிறைவேற்றற்குரிய எல்லாவித உதவிகளையும் செய்யும்.

8. General Assembly 9. Delegates 10. Alternate Delegates 1 1. Advisers 12. Security Council 13. Secretariat