பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐக்கிய நாடுகள் 21

4. பொருளாதார சமூக ஆலோசனை அவை 14 விதிகளின் படி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை நிலை நிறுத்திக் கொள்ளவும், மக்கள் தம் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள உதவவும் செய்யும்.

5. அனைத்துலக நாடுகளின் நீதிமன்றம்15: இந்நாடுகளிடையே நேரிடும் சட்ட சம்பந்தமான வழக்குகளைக் கவனிக்கும்.

6. அறக்கட்டளை ஆலோசனை அவை16; ஐ.நா. அமைக்கப்பெற்றபோது தாமாக-ஆட்சிப் பொறுப்பேற்றநாட்டுப் பகுதிகளைக் கருத்துடன் கவனித்துக் கொள்ளும்.

விதிகளை வகுக்கும் போது ஐ.நா. வேறு பல அமைப்புகள்17, குழுக்கள், ஆணையங்கள் ஆகியவற்றை அமைத்தன. ஆனால், இந்த ஆறு அமைப்புகளே விதிகளின்படி செயற்பட்டுக் கொண்டிருக்கும்.

ஐ.நா. தலைமைச் செயலகம் கீழாறுகள் ஒரத்திலுள்ள நியுயார்க் மாநகர்ப் பகுதியுள் பல்வேறு கட்டடங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் மூன்று முக்கிய கட்டடங்கள். இவை:

பொதுப் பேரவைக் கட்டடம்18, செயலகக் கட்டடம்19, மாநாடு கூடும் கட்டடம்20 என்பவையாகும். ஐ.நா. உறுப்பினர்கள், இருக்கை வகைகள் கலைவேலைப் பாடுகள் அடங்கிய சிற்பங்கள், சிலைகள் ஆகியவை ஐ.நா.வுக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்கள்.

நாடுகளுடன் நட்புறவுகள் நிலை நாட்டுவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கல்லாமை, நோய், பசிப்பிணி ஆகியவற்றை ஒழிப்பதற்கும் செயற்பட்டு வரும் ஐ.நா. மனித நல மேம்பாட்டிற்காக முற்றிலுமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பெற வேண்டும். இன்றைய நிலையோ அதிகமாகிக் கொண்டு வரும் மிகச்சிக்கலான சவால்களும் தொல்லைகளும் நிறைந்தவை; காலநிலை மாற்றம், பயங்கரவாதம், போதைமாத்திரை கடத்தல், அமைதியில் கீறல்கள், அகதிகள்-மக்களிடையே எழுந்துள்ள போராட்டங்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும். இங்ஙனமாக இந்த ஐ.நா. எதிர்பாராத உரிமைத் தேவைகளைச் சந்திக்கும் நிலையிலும் புதிய சந்தர்ப்பங்களில் பணிபுரியும் நிலையிலும் உள்ளது.

14. Economic and Social Council

15. International Court of Justice

16. Trusteeship Council 17, Agencies

18. General Assembly Building

19. Secretariat Building. இது கண்ணாடி, சலவைக் கல்லாலான 39-மாடிக் கட்டடம்.

20. Conference Building. இது மூன்று கட்டடங்களையும் இணைக்கின்றது.