பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ♦ என் அமெரிக்கப் பயணம்

1. ஐ.நா. கல்வி அறிவியல் பற்றிய அமைப்பு[1]

2. உலக உடல் நலப் பாதுகாப்பு அமைப்பு [2]

3. ஐ.நா. குழந்தைகள் திடீர் அத்யாவசிய நிதி [3]

4. உணவு உழவுத் தொழில் அமைப்பு[4]

5. அனைத்து நாடுகளின் தொழிலாளர் நல அமைப்பு[5]

இவற்றில் முதலாவதாகக் குறிப்பிடப் பெற்றுள்ள அமைப்பின் ஆதரவில்தான் சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் சர்.ஏ.எல். முதலியாரும், வரலாற்றுத்துறையைச் சார்ந்த பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரும் இணைந்து ஏற்படுத்தியதுதான் தெற்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்[6]. இதில் தான் அடியேன் 1996-பிப்ரவரி முதல் 2002 வரை மதிப்பியல் இயக்குநராகப்[7] பணியாற்றி வந்துள்ளேன்.


  1. UNESCO -United Nations Education and Scientific Organization. இஃது இப்போது பெயர் மாற்றம் அடைந்து விட்டது.
  2. WHO-World Health Organisation.
  3. UNICEF—United Nations Children’s Emergency Fund.
  4. FAO-Food and Agricultural Organization.
  5. ILO-International Labour Organization.
  6. Institute of Traditional Cultures of South and South East Asia.
  7. Honorary Director.