பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ♦ என் அமெரிக்கப் பயணம்

புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
      அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

- திருவாய் 10:10

என்ற நம்மாழ்வார் பாசுரத்தை ஓதி உளங்கரைந்து அவன் இணைத் தாமரை அடிகளை வழிபடுகின்றேன்.

அடுத்து திருக்கோவிலில் பரிவார தேவதைகளாக எழுந்தருளியிருக்கும் கடவுளர்களை வழிபடுகின்றேன். முதலாவதாக,

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
      உன்விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
      ததும்பி வெதும்பி யுள்ளம்
பொய்தான் தவிர்த்துன்னைப் போற்றி
      சயசய போற்றி யென்னும்
கைதான் நெகிழவி டேன்உடை
      யாய் என்னைக் கண்டு கொள்ளே

- திருவா. திருச்ச....1[1]

என்ற மணிவாசகப் பெருமான் திருப்பாடலை உள்ளம் நெகிழ ஓதி வணங்குகின்றேன்.

அடுத்து அம்மன் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமாட்டியை,

கார் ஒழுகும் குழலாளை கருணைவழித்து
      ஒழுகும் இரு கடைக்கண் ணாளை
சேல்குழ நிலவு ஒழுகப் புழுகுஒழுக
      அழகுஒழுகும் முகத்தி னாளை
வார் ஒழுகும் தனத்தாளை வடிவு ஒழுகித்
      தெரியாத மருங்கு லாளை
சீர் ஒழுகும் பதத்தாளை, அருணை உண்
      முலையாளைச் சிந்தை சேர்ப்போம்

- அருணாசலப்புராணம்-9

அடுத்து ஆறுமுகன் சந்நிதிக்குப் போகின்றோம். அந்த வள்ளி நாயகனை,


  1. நான் எட்டாம் வகுப்பில் பயின்றபோது (1932) என் ஆசிரியர் திரு. இராமசாமி அய்யர். இப்பாடலை இசையோடு பாடி அநுபவித்துக் கற்பித்து அழுதலை நினைவு கூர்கின்றேன்.