பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 27

புன்னெறி யதனிற் செல்லும்
       போக்கினை விலக்கி மேலா
நன்னெறி ஒழுகச் செய்து
       நவையறு காட்சி நல்கி
என்னையும் அடியனாக்கி
       இருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல்

       பாதபங் கயங்கள் போற்றி - கந்தபுராணம்-14

தெய்வயானைக் கொழுநனை வணங்கிய பின் பூமகள் சந்நிதிக்கு வருகின்றோம். அவளை,

மாதவன் சக்தியினைச் செய்ய
       மலைவளர் மணியினை வாழ்த்திடுவோ
போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்
       போதிலும் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
       வேதமும் வெறுப்புறச் சோரர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-அன்னை
       மாமகள் அடியினை சரண்புகுவோம்.

நாரணன் மார்பினிலே-அன்பு
       நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பக்தரிலும்-பசுத்
       தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தம் தோளினிலும் உடல்
       வியர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் ஒளி
       பரவிட வீற்றிருந் தருள்புரிவாள்
- பாரதியார், தோ, பா, திருமகளைச் சரணம்

புகுதல்-1,4

என்ற பாடல்களில் பெரிய பிராட்டியாரைச் சரண் புகுதல் சாற்றப்படுகின்றது. இப்பாடல்கள் திருமகளின் நிலை தீட்டப்பெறுவதைச் சிந்திக்கச் செய்கின்றது. திருமகள் புருஷகாரபூதை (தகவுரை வழங்குபவள்) மட்டும் அல்லள்; தானே தனித்தியங்கும் அதிகாரத்தையும் பெற்றவள் (வடகலை) என்பதையும் எண்ணச் செய்கின்றன.