பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 0 என் அமெரிக்கப் பயணம்

1916 ஆகஸ்ட்டில் தமிழகத்தில் (இந்தியா) பிறந்த நான் 2002 மே மாதம் நியூயார்கில் (அமெரிக்கா) பேசவேண்டும் என்பது என் பிராரப்தகர்மத்தின்’ (நுகர்வினையின்) பயன். முறை வழிப்படும் ஆருயிர் (புறம்-192) என்பது சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கல்லவா? (படம் - 1)

தமிழகத்தில் சைவப் பெருமக்களின் கூட்டம் அதிகம்; பாடின புலவர்களின் கூட்டமும் அதிகம். ஆகவே, சைவ சமய இலக்கிய நூல்களும் சைவ தத்துவ (சித்தாந்த) நூல்களும் பல்கிப் பெருகியுள்ளன. வைணவப் பெருமக்களின் கூட்டம் குறைவு; பாடிய புலவர்களின் தொகையும் குறைவு, ஆகவே வைணவ சமய இலக்கியங்களும் தத்துவ நூல்களும் அளவில் குறைவு. சைவ நூல்களில் நாலில் ஒரு பங்காவது இருக்குமா என்பது ஐயப்பாடே. இதுகாறும் எந்த அறிஞரும் இந்த அளவு மதிப்பீட்டில் இயங்கித் தம் கருத்தை வெளியிடவில்லை. (படம் - 2), (படம் - 3), (படம் - 4)

இந்த ஒப்பீட்டை இலக்கியத் தொகுப்பு முதல் தத்துவங்கள் வளர்ச்சி வரை கொண்டு செலுத்துவோம்.

1. இலக்கியத் தொகுப்பு:

இரண்டு சமய இலக்கியத் தொகுப்புகளிலும் உண்மை வரலாறு சிறிது கற்பனையும் கலந்தே காணப்பெறுகின்றன. இரண்டும் சைவர்களால் ‘கோயில்’ எனக்குறிப்பிடப் பெறும் சிதம்பரத்துக்கருகிலுள்ள இரண்டு ஊர்களிலிருந்தே தொடங்குகின்றன.

1. காட்டு மன்னார் கோயில்: சிதம்பரத்திற்கு மேற்கே சுமார் முப்பது கி.மீ. தொலைவிலுள்ளது இவ்வூர். அந்த ஊர்த் திருமால் ஆலயத்தில் நாதமுனிகள் என்ற வைணவப் பெருமகனார் ஒருவர் மன்னனார்’ என்ற பெயர் கொண்ட திருமால் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தில் வழிபாடு முதலிய திருத்தொண்டுகள் புரிந்து வந்தார்.

ஒரு சமயம் மேல் நாட்டிலிருந்து போந்த இரண்டு வைணவச் சீலர்கள் ‘ஆராஅமுதே’ எனத் தொடங்கும் பாசுரத்தை (திருவாய் 5.8:1) ஒதி வழிபட்டனர். அதில் பலகருதல் பாசுரத்திலுள்ள ஆயிரத்தில் இப்பத்தும்’ என்று வரும் தொடரைச் செவிமடுத்த நாத முனிகள் இவை தவிர ‘ஏனையவை தெரியுமா?’ என வினவ, அதற்கு அவர்கள் யாம் அறியோம்; இவை மட்டுமே யாங்கள் அறிந்தவை என்று மறுமொழி பகர்ந்தார்கள்.இந்தப்

2. பல்வேறுபிறவிகளில் செய்த வினையில் தொகுப்பு'சஞ்சிதம் (பழவினை); இதன் ஒரு பகுதியால் இப்பிறப்பு நேரிடுகின்றது. இப்பகுதி பிராரத்தம் (நுகர்வினை) என்பது. இப்பிறப்பில் செய்து வரும் வினை ஆகாமியம் (எதிர்வினை).

3. வைணவப் பெருமக்கள் திருஅரங்கத்தைக் கோயில் என்றே குறிப்பிடுவர்.