பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 37

சிற்றறிவுடைய உயிர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

பாசம்: ‘பாசம்’ என்பதற்குக் கட்டுவது என்பது பொருள். உயிர்களைப் பிணித்து நிற்கும் இது ஆணவம், கன்மம், மாயை என்று மூவகைப்படும்.

வைணவம்: சித்தாகிய உயிர்களை மூவகையாகப் பிரித்துப் பேசும்.

அவை:

1. பத்தர்: தளைப்பட்டிருப்பவர்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

2. முத்தர்: தளைகளைக் களைந்து விட்டு பரமபதத்தை அடைந்தவர்கள் இதில் அடங்குவர்.

3.நித்தியர்: சம்சார சம்பந்தம் இல்லாமல் பரமபதத்திலுள்ள அனந்தன், கருடன், சேனை முதலியார் (விசுவக்சேனர்) இப்பகுதியுள் அடங்குவர்.

சைவம்: பசுவாகிய உயிர்த் தொகுதிகள் இங்கும் மூவகையாகப் பிரித்துப் பேசப்பெறும். அவை:

1. விஞ்ஞானகலர்: விஞ்ஞானத்தால் கலை நீங்கப் பெற்றவர்கள். ஆணவம் என்ற ஒருமலம் உடையவர்கள்.

2. பிரளயாகலர்: பிரளயத்தில் கலைநீங்கப் பெற்றவர்கள். ஆணவம், கன்மம் என்ற இருமலம் உடையவர்கள்.

3. சகலர்: கலையோடு கூடியவர்கள். ஆணவம் கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் உடையவர்கள். கலை-தேவையான கூறு.

வைணவம்

அசித்து

1. சுத்த தத்துவம்: இராசதம், தாமசம் என்ற குணங்கள் கலவாதது, பரமபதத்திலுள்ள விமானம், கோபுரம் முதலியவை இதில் அடங்கும். இவை மாறாமல் (Disintegration) அப்படியே இருக்கும்.

2. மிச்ரத்துவம்: சத்துவம், இராசதம், தாமசம் என்ற முக்குணங்களை உடையது. இதனால் இது ‘திரிகுணம்’ என்ற பெயராலும் வழங்கும். முக்குணங்கள் சமமான நிலையில் உள்ளபோது பிரகிருதியின் விகாரங்கள் நாம ரூப பேதமில்லாமல் பிரமாணங்களால் காணக் கூடாதபடி அதிசூக்குமங்களாக இருக்கும். இதுவே மகாப் பிரளயநிலை. இந்த முக்குணங்கள் ஏற்றத் தாழ்வை அடையுங்கால் இந்தப்பிரகிருதி பலவித தத்துவங்களாக மாறி நாம ரூபவிசேடத்தை உடையனவாகும். இவை பிரமாணங்களால் காணக் கூடியவை. புலன்கள்-5, பொறிகள்-5, கருமேந்திரியங்கள்-5, ஞானேந்திரியங்கள்-5, மகத்-1, அகங்காரம்-1, மனம்-1,