பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 39

ஐந்து நிலைகள் 1. பரத்துவம்: நித்திய விபூதியில் (வைகுந்தம்) மூன்று தேவிமார்களுடன் ஒக்க எழுந்தருளியிருக்கும் இருப்பு.

2. வியூகம்: லீலாவிபூதியில் (இந்த உலகில்) படைப்பு, அளிப்பு, அழிப்புச் செயல்கள் நடைபெறவும், சம்சாரிகளைக் கவனிக்கவும், உபாசிப்பவர்களுக்கு அருள் சுரக்கவும் வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இருக்கும் இருப்பு.

3. விபவம்: ஆவேச அவதாரம், முக்கிய அவதாரம். அடைந்தாரைக் காத்தல், விரோதிகளைப் போக்கல், வைதிக தர்மங்களை நிலைநிறுத்தல் ஆகியவை பொருட்டு.

4. அந்தர்யாமித்துவம்: சேநர்களின் இதயகமலத்தில் மங்களகரமான திருமேனியுடன் பெரிய பிராட்டியாரோடு கட்டைவிரல் அளவாய் எழுந்தருளியிருக்கும் இருப்பு

5. அர்ச்சாவதாரம்: அடியார்கள் விரும்பும் திருமேனிகளையும் திருப்பெயர்களையும் கொண்டிலங்கும் இருப்பு:எல்லாநிலை எம்பெருமான்களும் இந்நிலையி லிருப்பதால் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்தது இந்நிலை எம்பெருமான்களையே.

பதி:சைவத்தில் சிவபெருமானே முழுமுதற்கடவுள். சங்கார காரணனே முதற்கடவுள் (சி.ஞா.போ.1) கம்பன் மூலபலவதைப் படலத்தில் தீமொய்த்த அனைய செங்கண்’ (231) என்ற பாடலில் ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற்று ஒருவன் ஒத்தான் என்று விளக்குவான்.

ஐந்து நிலைகள்: சொரூபநிலை - தன் இயல்பு; சிவம் ஒன்றேயாக இருத்தல்; உருவம் இல்லை. தடத்தநிலை குணங்களோடு உடையது. உருவம் உண்டு. இங்கு இந்நிலை சக்தி எனப்பெயர் பெறுகின்றது. இங்கு ஐந்து நிலைகளைக் காணலாம். பதி உலகத்தை நோக்குங்கால் 1. பராசக்தியில் ஒரு சிறுகூறு உலகத்தைத் தொழிற்படுத்த முற்படும். அதனை 2. ஆதிசக்தி என வழங்குவர். இது திரோதானசக்தி என்ற திருப் பெயரையும் உடையது. திரோதானம் மறைப்பது திரோதன சக்தி உலகத்தைத் தொழிற்படுத்த இச்சித்தலால் அஃது 3. இச்சாசக்தி எனப் பெயர் பெறுகின்றது. அதற்குரிய வழிகளை ஆராய்தலால் 4. ஞானசக்தி என்ற திருநாமத்தை ஏற்கின்றது. அவ்வழியே தொழிற்படுத்த நினைத்தலால் 5. கிரியாசக்தி என்ற திருப்பெயரையும் கொள்கிறது. ஆகவே இங்கு ஐந்து சக்திகளைக் காண்கின்றோம்.