பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 0 என் அமெரிக்கப் பயணம்

வைணவம்:

3. இதம் - முக்திக்கு வழிகள் நான்கு. அவை:

(1) கர்மயோகம்: சாத்திரப்படி நித்திய நைமித்திய கடமைகள் செய்தல்.

(2) ஞானயோகம்: முன்னதால் தூய்மையடைந்த ஆன்மாதியானத்தில் ஆழ்தல். இது கைவல்யநிலை (ஆன்மாதுபவம்). எல்லா உயிர்களிலும் ஆன்மா ஒன்றே என அறிதல். இது இறைவனைச் சார்ந்திருக்கும் நிலை - அவனை

அடைய அவா.

(3) பக்தி யோகம்: இங்கும் ஞானநிலை உண்டு. தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை அறிதல். பக்தி தைலதாரை போலாதல், தம் சிறுமையையும் இறைவனது பெருமையையும் அறிதல். இது பரபக்தி, பரஞானம், பரம பக்தி என்று செயற்படும்.

(4) பிரபத்தியோகம்: சரணாகதி என்றும் வழங்கப்படும். இதில் ஐந்து அங்கங்கள். (அ) அது கூல்ய சங்கற்பம், (ஆ) பிராதி கூல்யவர்ஜனம், (இ) மகாவிசுவாசம் (ஈ) கோபத்ருவனம் (உ) கார்ப்பண்யம்.

சைவம்:

3. முக்திக்கு வழிகள் நான்கு. அவை: மனம், மொழி, மெய்களால் சிவனை நோக்கிச் செய்தல்,

(1) சரியை உருவத்திருமேனியைத் தீண்டிவழிபடுதல் தேவையானவற்றை அகல நின்று செய்தல்.

(2) கிரியை உருவத்திருமேனியின் அருகிலிருந்து மந்திரம், கிரியை, பாவணைகளால் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் - பலமுறைகள்

_6.

(3) யோகம் (கூடுதல்): புறத்தே செல்லும் அந்தக் கரணங்களை அடக்கி அகத்தே நிறுத்தி இறைவனோடு ஒன்றுச் செய்தல் (8 கூறுகள் இயமம் முதலியன).

(4) ஞானம்: முதல் மூன்றும் ஞானத்தின் வளர்ச்சிப்படிகள். இதில் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டை கூடல் என்ற நான்கு நிலைகள்.

4. மந்திரங்கள்

வைணவம்

(1) திருமந்திரம் : ஒம் நமோ நாராயணாய என்பது பதரிகாசிரமத்தில் நரனுக்கு நாராயணன் உபதேசித்தது. இதுவே மூலமந்திரம். (எட்டெழுத்து மந்திரம்)