பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 41

(2) துவையம்: பெருமான் (வைகுந்தத்தில்) பிராட்டிக்கு உபதேசித்தது.

(3) சரமசுலோகம்: பாரதப்போர்த் தொடக்கத்தில் கண்ணன் காண்டீபனுக்குத் தேர்த்தட்டிலிருந்து உபதேசித்தது (கீதை 18:66), கீதையில் இறுதி சுலோகம்.

சைவம்:

‘சிவாயநம என்பது. இங்கு இஃது ஒன்றே. இது ஐந்தெழுத்து மந்திரம்.

5. முத்தி: வைணவம், சைவம் இரண்டிலும் அவரவர் சமயத்திற்கு ஏற்றவாறு விவரித்திருத்தல், ஆனால், இரண்டிலும் நான்கு பொதுநிலைகள் காணப்பெறுகின்றன.

(1) சாலோகம்: இறைவனது உலகம்; இருப்பிடம்.

(2) சாமீபம்: இறைவனை அருகனைந்து நிற்றல்.

(3) சாரூபம் உருவம். பெரிய திருமேனி முதலியவற்றை உடையவராய்த் தோழர்போல் நெருங்கி அளவளாவும் உரிமை.

(4) சாயுச்சியம்: இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை.

5. வினை:

இரண்டு சமயத்திற்கும் பொது.

சஞ்சிதம் - பழவினை பிராரப்தம் - நுகர்வினை

ஆகாமியம் - எதிர்வினை

இத்துடன் உரை நிறைவு பெறுகின்றது.

4. புத்த விகார்: அமெரிக்கன் அருங்காட்சியகம் (இயற்கை வரலாறு) பார்த்துத் திரும்பும்போது (மே மாதம் 26 - மாலை 4.00 மணி) இந்தத் திருக்கோயிலுக்கு வருகின்றோம். முன்னொரு முறை வந்து கோயில் மூடியிருந்தமையால் ஏமாந்து திரும்பினோம். இன்று (மே-26, 2002 வைகாசி விசாகம் புத்தபெளர்ணமி அன்று புத்த பகவானைச் சேவித்து அவன் அருள் பெறவேண்டும் என்று எங்கள் நுகர்வினை இருந்தது போலும்! புத்தபகவான் பிறப்பு வளர்ப்புபற்றிச் சில சொற்கள். கி.மு. 623-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பெளர்ணமி நாளன்று இராணி மகாமாயை கபிலவாஸ்துவிலிருந்து (நேபாளம்) கருவுயிர்ப்பதற்காக தேவதகா என்ற ஊரிலுள்ள இல்லத்தை நோக்கிப் பயணமாகின்றார். ஆனால், அந்த இல்லத்தை அடையுமுன் நடுவழியில் சால் மரத்தின் நிழலில் ஆண்மகவைப் பெற்றெடுக்கின்றார்.