பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 43

யோக நிலையிலமைந்த தங்கத்தாலான புத்தர் சிலையைக் காண்கின்றோம் (படம்-5), செந்நிற, பச்சைநிற மெத்தைகளாலான இருக்கைகளில் பக்தர்கள் அமர்ந்திருக்க வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்களும் இருக்கைகளில் அமர்ந்து வழிபாட்டில் கலந்து கொண்டோம். புத்தபிட்சு (துறவி) ஒருவர் சிங்கள மொழியிலமைந்த வழிபாட்டுப் பாடல்களை ஒத கூடியிருந்தோர் அனைவரும் அவற்றை அடுத்தடுத்துத் திரும்பியோத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்துவிட்டு 5 மணி சுமாருக்குத் திரும்பினோம். இங்கு எழுந்தருளியிருக்கும் தங்கத்தாலான திருவுருவம் எங்கள் உடலில் உணர்வுகளையும் உள்ளத்தில் கிளர்ச்சிகளையும் எழுப்பியது இன்றளவும் எங்கள் மனத்தில் பசுமையாக நிலையாக இடம் பெற்றுவிட்டது.

5. பஃபலோ நகரிலுள்ள இந்து - செயினக் கோயில்: அருவிகளைப் பார்க்கச் செல்வதற்குமுன் இங்குள்ள திருக்கோவில் சேவையை முடித்துக் கொள்ளலாம் என்று நண்பர் டாக்டர் தனஞ்செயன் தெரிவிக்கவே நாங்கள் (மே மாதம் 31, வெள்ளி - மாலை 6.30 மணி) திருக்கோயிலுக்கு வந்தோம். இங்கு பல்வேறு தெய்வத் திருமேனிகள் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளன. திருவேங்கடவனுக்கு மட்டும் வழிபாடு நடைபெற்றது. யாரோ ஒருவர் (ஆந்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்) வட மொழிச் சுலோகங்களை ஏட்டைப் பார்த்துப் படித்துக் கொண்டு வழிபாடு நடத்தினார். அங்கு வந்திருந்தவர்களில் இருவர் ஏட்டைப் பார்த்து உலகம் உண்ட (திருவாய் 6.10) திருவாய் மொழியின் இறுதி இரண்டு பாசுரங்களைச் சேவித்தனர்.

‘அகல்கில்லேன் இறையும் என்று

அலர்மேல் மங்கை உறைமார்பா

நிகர்இல் புகலாய்: உலகம் மூன்று

உடையாய்! என்னை ஆள்வானே!

நிகர்இல் அமரர் முனிக்கணங்கள்

விரும்பும் திருவேங் கடத்தானே!

1 1968-இல் திருப்பதியில் பணியாற்றியபோது காசி யாத்திரையாக நானும் என் துணைவியும் விஷ்ணுகயையில் மூன்று சிரார்த்தங்களை நிறைவுசெய்துவிட்டு மிதிவண்டி ரிக்சாவில் சுமார் 5 கல்தொலைவிலுள்ள (கட்டணம் போகவர ரூ. 71- என்பதாக நினைவு) புத்தகயைக்குச் சென்றோம். புத்த பகவான் ஞானம் பெற்ற போதி மரத்தடியில் நின்று வழிபாடு செய்தது இன்றும் மனத்தில் பகமையாக உள்ளதை நினைவு கூர்கின்றோம். பல்வேறு நாட்டு விடுதிகள் தனித்தனியாகக் கட்டப்பெற்றிருந்தன. பல்வேறு மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அங்குமிங்குமாக மெளனம் கலையாமல் நடமாடிக் கொண்டிருந்தனர். எள்விழும் ஒலி கூடக் கேட்காதமெளனம் சாலை யெங்கும் நிலவி இருந்தது. அத்தகைய மெளனத்தை இன்று கண்டும் மகிழ்ந்தோம்.