பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 53

உள்ளே செல்ல அனுமதி இல்லை. மிதி வண்டிகள் உள்ளே அமைந்துள்ள தெருக்களில் செல்லலாம்; குழந்தைகள் அமர்ந்துள்ள தள்ளுவண்டிகளும் சிறுவர்கள் இயக்கும் மிதிவண்டிகளும் செல்லலாம். பெரியவர்கள் செலுத்தவல்ல மிதி வண்டிகள் பூங்காவிற்குள்ளேயே வாடகைக்கெனவே வைத்துள்ளனர். சுற்றிப்பார்க்க விரும்புவோர் இவற்றில் ஒன்றை அமர்த்திக் கொண்டு சுற்றிப் பார்க்கலாம். இதனைச் சுற்றிப் பார்க்க ஒருசில குதிரை வண்டிகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டும் சுற்றிப் பார்க்கலாம். கால்நடையில் சுற்றிப் பார்க்க விரும்பினால் மாதக் கணக்கில் சென்று பார்க்க வேண்டும்.

இயற்கை அழகு செயற்கை முறையில் அமைக்கப்பெற்ற பூங்காவாக இருப்பினும், எங்கு நோக்கினும் பூஞ்சோலைகள்; மரத்தோப்புகள். பல்வேறு வகைப் பூக்கள் பல்வேறு வண்ணங்களுடன் பூத்துக் குலுங்கும் அழகு சொல்லுந்தரமன்று. மரத்தோப்புகளில் காணப்பெறும் பல்வேறு வகை மரங்களின் அழகும் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. அதிகமாகக் காணப்பெறுவன வோக் மரங்கள். இவை நம்மூர் தேக்கு மரங்களை யொத்தவை. இவற்றில் பலகைகள் அறுக்கலாம். இப்பலகைகள் தாம் அமெரிக்காவில் வீடுகட்டப் பயன்படுத்தப் பெறுகின்றன. மூன்று மாடிகள் வரை இவ்வகை வீடுகள் அமைகின்றன. பலகைகளை நம் மனத்திற்குகந்த வண்ணப்பூச்சினை மேற் கொள்ளலாம் வெளியில் மெல்லிய செங்கற்களை சீமைக்காரை கொண்டு ஒட்டி அழகுபடுத்தியுள்ளனர். குளிர் காலத்தில் பனிக்கட்டி சேர்ந்து வீட்டின்மீது பாரம் அதிகமாவதால் வீடுகளின் மேற்பகுதி கூம்பாக அமைக்கப்பெறுகின்றது. மூன்று மாடிக்கட்கு மேல் உள்ள கட்டடங்கள் செங்கல்கள்-சீமைக்காரையினாலானவை. மரங்களில் மாப்பில்’ என்ற ஒரு வகை மரம் நம் கண்ணைக் கவர்கின்றது. இதன் இலைகள் பச்சையாகத் தோன்றுகின்றன. இவை படிப்படியாக மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களாக மாறி இறுதியில் உதிர்ந்து விடுகின்றன. இந்த அற்புதமான காட்சிகள் பார்ப்போர் கண்களுக்கு வியத்தகு விருந்தளித்து உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகின்றன.

காரை மணிக்கு ஒரு டாலர் வீதம் இரண்டு மணி நேரத்துக்கு 2 டாலர் செலுத்தி ஒரிடத்தில் நிறுத்திவிட்டு (நிறுத்தும் இடவிவரம், தெரு எண் முதலியவற்றைக் குறித்துக் கொள்ளுதல் அவசியம்) நுழைவதற்கென ஏற்படுத்தப்பெற்றுள்ள பல வழிகளில் ஒருவழியாக உள்ளே செல்லுகின்றோம். காலையிலிருந்தே கார்கள் வந்த வண்ணமிருப்பதால் பூங்காவின் நான்கு புறங்களிலும் உரிய இடங்களில் அவற்றை நிறுத்திவிடுவதால் இடம்

3. Oak 4. Cement 5. Maple