பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ) என் அமெரிக்கப் பயணம்

கிடைப்பது அரிது. நாங்கள் சுற்றிச் சுற்றி அலைந்தோம்; இடம் கிடைக்கவில்லை. இறுதியில் பூங்காவிற்கு அருகிலுள்ள தெரு ஒன்றில் கட்டணம் செலுத்தி காரை நிறுத்த இடம் கண்டோம்.

குளம்": ஒரு குளம் இருக்கும் இடத்திற்கு வருகின்றோம். அதன் நாற்புறமும் இருந்து சிலர் விளையாட்டுப் படகுகளை தொலைதுார இயக்கும் கருவிகளைக் கொண்டு இயக்குவதைக் காண்கின்றோம். யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அஃது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு குறியை வலம் வரவேண்டும். கோழிச்சண்டையில் பார்வையாளர்கள் பந்தயம் கட்டி இழப்பு, வரவு அடைவதைப் போல் இங்கும் அதே முறையைக் கையாண்டு பலாபலன் அடைவதைக் காண்கின்றோம். அந்த இடத்தில் என்னையும் என் மனைவியையும் நிறுத்தி வைத்து ஒளிப்படம் எடுத்தான் என் மகன். சிறிது நேரம் ஒர் இருக்கையில் அமர்ந்துகொண்டு படகுக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம். (படம் - 10)

ஏரி”. அடுத்து ஏரியருகில் வருகின்றோம். அருகில் படகு இல்லம்” உள்ளது. அங்கு பெரிய படகுகள் வைக்கப்பெற்றுள்ளன. ஏதாவது ஒரு படகை வாடகைக்கு வாங்கிக் கொண்டு இருவர் அல்லது மூவர் அமர்ந்து துடுப்புகளைக் கொண்டு தாமே இயக்கி ஏரியைச் சுற்றி வரலாம். பலர் இவ்வாறு படகுகளை இயக்கிச் சுற்றி வருவதைக் கண்டு மகிழ்ந்தோம். பல ஆண்டுகளுக்கு முன் (1979) கோடைக்காலத்தில் நானும் என் துணைவியும் கொடைக்கானல் சென்று மூன்று வாரம் அங்கு தங்கியிருந்தபொழுது என் நண்பர் பா. அரங்கசாமிரெட்டியார் (வக்கீல்) அங்கு தங்கி இருந்தார். அங்கும் ஏரியில் படகுகளைத் தாமே இயக்கும் ஏற்பாடு இருந்தது. திரு. அரங்கசாமி ரெட்டியார் ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி எங்களை ஏற்றிக் கொண்டு தாம் படகை இயக்கி ஏரியைச் சுற்றி வந்ததை நினைத்துக் கொண்டோம். அப்போது இருந்த இளமைத் தெம்பு இப்போது இல்லாததால் பார்வையினாலேயே இவற்றைக் கண்டு அனுபவித்து மகிழ்வதுடன் மனநிறைவு கொண்டோம்.

திறந்தவெளி அரங்கு": இத்தகைய ஒரு சிறு அமைப்பு இருந்த இடத்திற்கு வருகின்றோம். அதன் முன்புறம் அகன்ற காலியிடம், சுற்றியும் இருபுறங்களிலும் பல பெஞ்சு அமைப்புகள். அரங்கு பேச்சு நிகழ்ச்சிகளை அமைப்பதோடுசரி; நாட்டியம் முதலியவை அமைப்பதற்கு இடம் போதாது. பேச்சு நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது ஒலிபெருக்கி” அமைப்புகளை

6. Tank 7. Toy boat 8. Remote Control 9. Photo 10. Lake 11. Boat House 12. Open theatre 13. Mike set