பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 0 என் அமெரிக்கப் பயணம்

பெரிய பூங்காவாதலால் கார்கள் செல்லவும், கால் நடையில் செல்லும் மக்கள் செல்லவும் பல நுழைவிடங்கள் அமைந்திருந்தன. அவற்றினுள் அவர்கள் உள் நுழைவதையும் காண முடிந்தது. (படம் - 12)

சிறுவர்கள் விளையாடுவதற்குத் தனிப்பூங்காப் பகுதி ஒன்றிருந்தது. சிறுவர்கள் பொம்மைகளுடன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தோம்.

இந்தப் பூங்காவில் சவங்கள் புதைக்கும் கல்லறை, பலசிறுசிறு தோட்டங்கள், படகு வசதிகள் உயிர்ப் பிராணிகள் (பறவைகள், மிருகங்கள், கொடிய மிருகங்கள் அடங்கிய) பூங்கா”, பழம்பொருள் காட்சியகம் உள்ளன. இக்காட்சியகத்தில் 1820 முதல் சேமிக்கப்பெற்ற அமெரிக்கப் பழம் பொருள்கள், வேறு பழம்பொருள்கள் அடக்கம். அருவிகள்”, சிறுசிறுகுளங்கள்”, முதலியவை உள்ளன. உள்நாட்டுப் போரில் பங்கு கொண்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒரு பெரிய வளைவும், ஜான் எப். கென்னடிக்கு ஒரு நினைவுச்சின்னமும்” உள்ளன.இந்தப்பூங்கா காலை முதல் மாலை வரை திறந்தே இருக்கும். பழம்பொருள் காட்சியகம் வேண்டும் போது திறக்கப் பெற்றிருக்கும். இரண்டிலும் இலவச தொலை பேசி வசதிகள் உள்ளன.

(5) கிஸ்லெனா பூங்கா: 3 கல் தொலைவிலுள்ள இந்தப் பூங்காவிற்கு மே மாதம் 29, மாலை சுமார் 6 மணி அளவில் சென்றோம். வீட்டருகிலுள்ள பூங்காவைவிட இது பத்து மடங்கு பெரியது. சாலைக்கு இருபுறங்களிலும் இது விரிவாக அமைந்துள்ளது. குழந்தைகள் விளையாடும் பகுதிகள் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ளன. நான்கு இடங்களிலும் மிதி வண்டி ஒட்டி சிறுவர்கள் விளையாடுவதற்கு பெரிய தனி இடங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. சீமைக்காரை அமைந்த தரையில், முதியோர் பந்துகளைக் கொண்டு விளையாடத் தனி இடம் உண்டு; இவர்கள் உற்சாகமாக விளையாடுகின்றனர். குடிநீருக்காக 4 இடங்களிலும் தண்ணிர்க் குழாய்கள் பொருத்தப் பெற்றுள்ளன. குழந்தைகள் விளையாடும் இடங்களிலும் முதியோர் விளையாடும் இடங்களிலும் பார்வையாளர்கட்கு இருக்கை வசதிகள் செய்யப் பெற்றுள்ளன.

வீட்டருகிலுள்ள பூங்காக் குளத்தை விட இங்குள்ள குளம் மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றிலுமுள்ள நடைப்பாதைகளிலும் சிறுவர்கள் மிதிவண்டி ஒட்டி மகிழ்கின்றார்கள்.

6. Zoological Garden 7. Museum 8. Waterfalls 9. POO}s 10. Memorial 1. Kissena Park