பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 59

முதல்தளம்” என்னைச் சக்கர நாற்காலியில் என்மகனும், என் மனைவியை சக்கர நாற்காலியில் என் மருமகளும் மின் ஏற்றத்தில் ஏற்றி முதல் தளத்திற்குவந்து தள்ளிக் கொண்டுவர முதல் தளத்தில் வைக்கப் பெற்ற பொருள்களைப் பார்க்கத் தொடங்குகின்றோம். (படம் - 13)

(அ) முதலில், நிலவுலகம் ஆதியில் தோன்றிய முறை, பூகம்பம் (நிலநடுக்கம்) உண்டாகும் முறை எரிமலைகளின் தோற்றம் ஆகியவை அவை தோன்றும் சூழல்களைப் பெரிய அளவுகளில் காட்டப் பெற்றிருந்ததைக் கண்டு வியப்பெய்தினோம்.

(ஆ) அடுத்து சந்திரனின் தோற்றம் அப்போலோ-11 விண்கலம் அம்புலியில் இறங்கிய போது எடுக்கப் பெற்ற பல்வேறு ஒளிப்படங்களுடன் விளக்கப் பெற்றிருந்தமை அற்புதமாக இருந்தது. அந்த மண்டபத்திற்குப் போகும் முகப்பில் ஒரு பெரிய சந்திரனை அதன் பெளதிகத் தோற்றம் விளங்கும் படிமம் வைக்கப் பெற்றிருந்தது. பலர், இருவர் கைகோத்தநிலையில் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததையும் கண்டு மகிழ்ந்தோம்.

(இ) அடுத்து வட அமரிக்காவில் காணப்பெறும் பிராணிகள் குறிப்பாகப் பல்வறுே மிருகங்கள், மரங்கள், பூமண்டலத்தில் காணப்பெறும் பல்வேறு கல்வகைகள் ஆகியவற்றைக் கண்டதை ஈண்டு விளக்குவேன். இந்த மண்டபத்தின் அகன்ற நுழைவாயிலின் முகப்பில் பதப்படுத்தப்பெற்ற பத்து பெரிய யானைகளின் கூட்டம் எங்களை மிரள வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன் என் மகன் கேரளாவில் பணியாற்றியபொழுது, ஒர் யாற்றில் படகில் சென்றபோது ஒரு புறக் கரைகளில் சில இடங்களில் குட்டிகள் சிறியவை கொண்ட யானைக் கூட்டங்களைக் கண்டமையை நினைவு கூரச் செய்கின்றது.

மிருக வகைகள்: (1) பதப்படுத்தப் பெற்ற ஒரு பெரிய யானையொன்றை, முன்பு அது இருந்த இயற்கைச் சூழ்நிலை கெடாமல் வைக்கப் பெற்றிருந்ததைக் காணும் நாங்கள் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

(2) ஒரிடத்தில் பண்டைய இயற்கைச் சூழ்நிலையில் சிறியனவும் பெரியனவுமான ஒன்றிரண்டு பதப்படுத்தப்பட்ட கலைமான்களைக் கண்டு மகிழ்ந்தோம். (படம்-14, 15)

(3) பண்டைய இயற்கைச் சூழ்நிலையில் கண்டோர் வியக்கும் வண்ணம் (அ) ஒரு காட்டெருமை, (ஆ) மலைச் செம்மறியாடுகளின் கூட்டம், (இ) முயல், கரடி (ஈ) ஒநாய்கள், நரிவகைகள், (உ) வெள்ளைவால் மான்வகைகள் (ஊ)

6. அமெரிக்காவில் தரைதளம் (Ground Floor) என்று சொல்லும் மரபு இல்லை. அதனை முதல்

தளம் என்றே வழங்குவர்.