பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 0 என் அமெரிக்கப் பயணம்

பல்வேறு வகை மான் கூட்டங்கள், (எ) மலைவாழ் கம்பீரமான் சிங்கம், (ஏ) காட்டுப்பன்றி வகைகள், (ஜ) கரடி வகைகள், (ஒ) அலாஸ்கா கபில நிறப் பெருங்கரடி, (ஒ) ஒரிடத்தில் பயங்கரமான அமெரிக்கன் காட்டெருமைகள், (ஒள) முள்ளம் பன்றி வகைகள், பூனை வகைகள், அணில் வகைகள், பயங்கரமான ஒரு சிறுத்தைப் புலி. பதப்படுத்தப்பெற்ற இம்மிருகங்களைக் காட்டப் பெறுங்கால் அவை வாழ்ந்த காடுகளின் தோற்றம் இயற்கைச் சூழ்நிலை காட்டப் பெற்றிருப்பது பார்ப்போரை வியப்புக் கடலில் மூழ்க வைத்து விடுகின்றது. (படம் 16)

வயல்வெளிகள்: (1) ஒரிடத்தில் ஒர் ஆப்பிள் மரம் அற்புதமாகக் காட்டப்பெற்றிருந்தது - நான்கு நிலைகளில் (அ) ஒரு நிலையில் செழிப்புடன் வளர்ந்த ஆப்பிள் மரம், (ஆ) பிறிதொரு நிலையில் பூத்துக் குலுங்கும் ஆப்பிள் மரம், (இ) இன்னொரு நிலையில் காய்கள் தொங்கும் நிலையில் மரம், (ஈ) மற்றுமோர் நிலையில் கனிகள் தொங்கும் நிலையில் மரம்; இங்கும் சில கனிகள் மரத்தடியில் வைக்கப் பெற்றிருந்தன.

(2) வயல்வெளிகளில் (அ) கோடை, (ஆ) மாரி, (இ) குளிர், (ஈ) இலையுதிர் காலங்களில் பயிர்வகைகள் எப்படியிருந்தன என்பது மனம் கவரும் வண்ணம், பார்ப்பவர் வியப்பெய்யும் வண்ணம் அற்புதமாகக் காட்டப் பெற்றிருந்தது.

(3) மலைமாற்றங்கள் பல மைல் தூரம் காணும் வண்ணம் (அ) பசுமைச் செழிப்புடன் ஒருபுறம்; (ஆ) அவையே கோடையில் கருகிக் காய்ந்திருக்கும் நிலை (அருகில்) மற்றொருபுறம் காட்டப்பெற்றிருந்தது. பார்ப்போர் இவ்விடத்தைவிட்டு அகலாமல் ஈர்த்துப் பிடித்தவண்ணம் இக்காட்சிகள் அமைந்திருந்தன.

(4) சிறிய கடல் பகுதி - அதில் ஒரு தோணி, பெரிய கடல் பகுதி - அதில் ஒரு பெரிய படகு அக்கால இயற்கைச் சூழல் புலப்படும் வண்ணம் காட்டப் பெற்றிருப்பது கண்ணையும் கருத்தையும் கவர்வனவாக இருந்தன.

(5) பல்வேறு கண்டங்களின் காட்சிகள் ஒரிடத்தில் அமைக்கப் பெற்றிருந்தன. (அ) ஆஸ்திரேலியா, (ஆ) அமெரிக்கா, (இ) ஆஃபிரிக்கா, (ஈ) மெடிட்டரேனியன் பகுதிகள், (உ) ஐரோப்பா, (ஊ) ஆசியா. ஒரிடத்தில் ஒரு மிகப்பெரிய ஒக் மரத்தின் அடிப்பகுதி காட்டப்பெற்றிருந்தது அற்புதம்

(6) மனிதனின் படிவளர்ச்சி டார்வின் போன்ற அறிவியல் வல்லுநர்கள் குரங்கிலிருந்து மனித வளர்ச்சி நடைபெற்றதாகக் கூறுவர். ஒரிடத்தில் இரண்டு மனிதக் குரங்குகள். தொடர்ந்து பல்வேறு நிலைகளில் படிவளர்ச்சிகளில் அற்புதமாக காட்டப் பெற்றிருந்தன.

7. Evolution of man