பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 0 என் அமெரிக்கப் பயணம்

இரண்டு மூன்று பயங்கர உருவத்தைக் கொண்ட பெரிய காட்டெருமைகள் காணப் பெறுகின்றன.

அடுத்து சிங்கங்கள் உள்ள இடத்திற்கு வருகின்றோம். கம்பீரமான பிடரிமயிரைக் கொண்ட பெரிய ஆண்சிங்கம், அதனைச் சுற்றிலும் பல இடங்களில் ஒன்றிரண்டு பெண் சிங்கங்கள்-பலகல் தொலைவில் காணப் பெறுமாறுள்ள சூழ்நிலையில் இருப்பனவாகக் காட்டப் பெற்றிருப்பது

காண்போர் கவனத்தைக் கவர்வதாக உள்ளது.

அடுத்து அவை வாழ்ந்த இயற்கைச் சூழ்நிலையிலேயே காண்பவை மான், வரிக்குதிரை” தொடர்ந்து ஆடுமாடுகள், உழவுக் கருவிகள் அந்தந்த இயற்கைச் சூழ்நிலையிலேயே காண்கின்றோம்.

மெக்சிகோ-மத்திய அமெரிக்கப் பகுதிகள்: (1) தென் அமெரிக்கா பெரிய பருந்துவகைகள்’. அவை வாழ்ந்த பெரிய சூழ்நிலைகளுடன் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. காட்சிகள் அற்புதமாக கண்ணையும் கருத்தையும் ஆர்வத்துடன் ஈர்ப்பனவாக அமைந்துள்ளன.

(2) ஜப்பான் நாட்டைப்பற்றிய சில காட்சிகள் தக்க சூழ்நிலைகளுடன் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. சில நகரங்கள் பற்றிய காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளன.

ஆசிய கண்டத்தின் மிருகங்கள்: (1) ஆசிய நாட்டு சில மிருகங்கள் அவை வாழ்ந்த சூழ்நிலைகளுடன் நன்கு காட்டப் பெற்றுள்ளன.

(2) இந்தியா: (அ) விநாயகர், முருகன் போன்ற சில கடவுளர்களின் உருவங்கள் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன.

(ஆ) இந்திய மக்கள் கையாண்ட சில ஆயுத வகைகள் தக்க உருவங்களில் அமைத்துத் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன.

(இ) விழாக்கள்’ சில விவரங்களுடன் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன.

(ஈ) வடஇந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சில படங்களுடன் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. நாகாலாந்து மக்களைப் பற்றிய குறிப்புகள் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. தென் இந்தியாவைப்பற்றி, குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னட மக்களின் பழக்க வழக்கங்கள் ஏனோ இடம் பெறவில்லை.

10. Zebra 1 1. Vuitures 12. Festivals