பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64என் அமெரிக்கப் பயணம்


அவர்கள் பயன்படுத்திய ஆயுதவகைகள், (ஈ) குதிரைகள் - இவை யாவும் பெரிய அளவில் சூழ்நிலைகளுடன் மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன.

(5) பசிபிக் பிரதேசம்: இப்பிரதேசத்தில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைக் காட்டும் பான்மையில் அவர்கள் பயன்படுத்திய தோணி வகைகள், ஆயுத வகைகள், பாத்திர வகைகள், குடிசை வகைகள் முதலியவை சூழ்நிலைகளுடன் பெரிய அளவில் விளக்கமாகக் காட்டப் பெற்றுள்ளன. இங்குக் குரங்கு வகைகளும் அதிகமாக இருந்தன என்று தனியாகப் பெரிய அளவில் காட்டப் பெற்றுள்ளன.

நான்காவது தளம்: வழக்கற்று அழிந்து போன பிராணிகளைப் பற்றிய செய்திகள் இங்கு விளக்கப் பெறுகின்றன. இவற்றின் எலும்புக் கூடுகள் மட்டிலுமே காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன.

(1) டைனாசர்ஸ்17 என்ற பிராணியின் எலும்புக் கூடு நுழைவாயிலிலுள்ள ஒரு பெரிய அறை முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது; பார்க்கவே மிகப் பயங்கரம். அஃது உயிரோடுள்ள மிருகமாக இருக்கும்போது எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கக் கூடுமோ என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

(2) பெரிய ஆமையொன்றின் எலும்புக்கூடு. இஃது எவ்வளவு பெரிய ஆமை உருவில் இருந்திருக்கக் கூடும் என்று நினைத்து பார்க்கமுடிகிறது.

(3) முதுகெலும்புள்ள ஊர்ந்து செல்லும் பல்வேறு வகையான பிராணிகளின் எலும்புக் கூடுகள் தனித்தனியாக வைக்கப் பெற்றுள்ளவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.

(4) பல்வேறு வகை மீன்களின் எலும்புக் கூடுகள் தனித்தனியாகப் பார்வைக்கு வைக்கப் பெற்றுள்ளன.

(5) பழங்காலத்து மிகப் பெரிய யானை யொன்றன் எலும்புக் கூடு எங்கள் கவனத்தை ஈர்த்தது. இஃது உயிருள்ள யானையாயிருந்தபோது எவ்வளவு பெரிய உருவமுடைய பிராணியாக இருந்திருக்கக் கூடும் என்பதை நினைத்துப் பார்க்கின்றோம். இது உண்மையான யானை உருவில் இருந்தபோது புராணப் புகழ்பெற்ற இந்திரனின் ஐராவதம் என்ற வெள்ளை யானையை விடப் பெரிதாக இருந்திருக்கக் கூடுமோ என்று எண்ணிப் பார்த்து மகிழ்கின்றோம்.

(6) மிகப் பெரிய காட்டெருமையின்18 எலும்புக் கூடு ஒன்றும் பார்ப்போரின் கவனத்தைக் கவர வல்லதாக உள்ளது.


17. Dinosaurs  18. Bison