பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 65

(7) இன்னும் பல்வேறு வகைப் பிராணிகளின் எலும்புக் கூடுகள் தனித்தனியாக வைக்கப் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்தவண்ணம் வீடு திரும்ப ஆயத்தமாகின்றோம்.

வயது முதிர்ந்து தளர்ந்த நிலையிலிருக்கும் எங்களை என் மருமகளும் மகனும் சக்கர நாற்காலிகளில் அமரவைத்துத் தள்ளிக் கொண்டு வராவிட்டால் இவ்வளவு பெரிய இடங்களைச் சுற்றிப் பார்க்க இயலாது என்பதை எண்ணி பார்த்து அவர்களது அன்பையும் பாசத்தையும் நினைந்து பார்த்து உள்ளம் களிப்பெய்த உடல் புளகாங்கிதம் கொள்ள பூரித்து மகிழ்கின்றோம். சுற்றிப் பார்க்க மாலை நான்கு மணி வரை ஆகின்றது. தரை தளத்திலுள்ளவற்றைப் பார்ப்பதற்கே அதிக நேரம் ஆயிற்று.

சக்கர நாற்காலிகளுடன் மின்ஏற்ற வசதியுள்ள இடத்திற்கு வந்து எளிதாகக் கீழிறங்கி சக்கர நாற்காலிகளை உரியவரிடம் தந்துவிட்டு வீடுதிரும்ப நினைக்க எண்ணுகின்றோம்.

கார் நிறுத்த இடவசதியைத் தேடி எங்கோ இரண்டு தெருக்களுக்கப்பால் நிறுத்திவிட்டு வந்த எங்கள் மகன் டாக்டர். இராமகிருஷ்ணன் எங்கள் மூவரையும் காட்சியகத்தின் கீழே இருக்க வைத்து விட்டுத் தான் மட்டும் சென்று காரை எடுத்துக் கொண்டு வருகின்றான். முன்னொரு நாள் புத்தவிகாரைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த, புத்த பகவான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை அடைகின்றோம்”.

(2) இன்ட்ரெபிட் கடல்-காற்று-விண்வெளி பழம் பொருள் காட்சியகம்': நியுயார்க் மான்காட்டன் மேற்குக் கோடியில் 46-ஆம் தெரு 12வது அவின்யூ இவற்றின் கோடியிலும் ஹட்சன் நதியிலுமாக அமைக்கப்பெற்ற போர்க்கப்பல் இது. இரண்டாம் உலகப் பெரும் போரில் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடி மிகு புகழ்பெற்ற மரக்கலமாகும். அமெரிக்க நாட்டு வரலாற்றில் இன்று மிகுந்த வியத்தகு கவர்ச்சிகளில் ஒன்றாக நியுயார்க் மாநகரில் திகழ்ந்து வருகின்றது.

இதனைப் பார்க்கும் நோக்கத்துடன் ஞாயிறன்று முற்பகல் 10 மணிக்குக் காரில் புறப்பட்டோம். நாம் இருக்குமிடத்திலிருந்து இது சுமார் 20 கல் தொலைவிலுள்ளது. அன்று ஏதோ பள்ளிப் பிள்ளைகட்கு விழாக்களும் மிதிவண்டி ஒட்டப்பந்தயமும் நடைபெற்றதால் பிள்ளைகள் நடமாட்டத்திற்காக

19. New York Buddhis Vihara, 214-22 Spencer Avenue, Hollis Hillss, Ny 11427 Tel (718) 468-4212, Fax (718) 468-5283, Web, www, newyorkbuddhist.org.

1. Intrepid Sea-Air-Space Museum.

மத்தியப் பூங்காவைப் பார்க்கச் சென்றபோது நம் கவனத்தை ஈர்த்த தெருக்களின் எண்ணிக்கை அவின்யூவின் எண்ணிக்கை ஆகியவற்றை நினைவு கூர்கின்றோம்.