பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 67

சோவியத் அச்சுறுத்தலால் இன்ட்ரெபிட் தனது சேவையை 1954-இல் நிறுத்திக் கொண்டு விட்டது.

போர் ஒய்விற்குப் பின்னர் இன்ட்ரெபிட் பயனற்ற பொருள்கள் கிடக்கும் இடத்திற்குத்தள்ள வேண்டியநிலைதான். ஆனால், அதற்குப் பதிலாக அது 1982-இல் உலகத்தின் முதல் பெரிய மிதக்கும் பழம் பொருள் காப்பகமாக” மாற்றப்பெற்றுவிட்டது. இப்பொழுது பார்வையாளர்கள் கப்பலை இயக்கும்படியிலிருந்துகொண்டே நாட்டின் வரலாற்றை ஆய்பவர்களாக அமைகின்றனர்; கடல் காற்று விண்வெளி அமெரிக்க செயல் துணுக்கப்படி வளர்ச்சியை ஆராயத் துணிவுடையவராகின்றனர்.

(2) யு. எஸ். எஸ். குரோவ்லர்: இந்த நீர் மூழ்கிக் கப்பல் அணு ஆயுதத் தாக்குதலைத் தடுக்கவல்லது. இது இன்ட்ரெயிட்டிற்குப் போகும் வழியில் தனியாக வைக்கப் பெற்றுள்ளது. உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இருட்டாக இருக்கும். நாங்கள் இதனுள் சென்று பார்க்கவில்லை.

(3) யு. எஸ். எஸ். எட்சன்: குரோவ்லருக்கு அப்பால் தனியாக வைக்கப் பெற்றுள்ளது. இது வியட்நாம் போர் நடைபெற்றபோது பலமுற்றுகைகளில் பெரும்பங்கு கொண்டது. வெளியிலிருந்து மேல்வாரியாகப் பார்த்தோம். உட்சென்று பார்க்கவில்லை.

உள்ளே புகுவதற்குமுன் இன்ட்ரெபிட் கப்பல் பற்றி மேலும் சில கவர்ச்சிகரமான தகவல்களைத் தெரிந்து கொள்வோம். கப்பல் கட்டமைப்பு விலை 44,000,000 டாலர். எடை 27,100 டன்கள். எண்ணெய் போட்ட பிறகு எடை 33,000 டன்கள். கப்பலின் நீளம் 898 அடி அடிமட்டத்திலிருந்து உயரம் 152 அடி. சுக்கானின் குறுக்கு விட்டத்தின் அகலம் 103 அடி, மேல்மட்ட விட்டத்தின் அகலம் 152 அடி நீரில் மூழ்கியிருக்கும் ஆழம் 31 அடி ஆற்றல் அமைப்பு'-8 கொதிகலன்கள்’, 4 சுழலும் நீராவிப் பொறிகள்”, 4.15 அடி குறுக்கு விட்டமுள்ள சுழலும் இயக்கிகள்”.

கப்பலின் கொள்ளளவு": எரிபொருள் கொள்ளளவு 1,600,000 காலன்கள். மேலியக்கும் வாயு 3,00,000 காலன்கள். மேல்-கீழ் இயங்கும் அமைப்புகள் 3, நீராவிக் கவண் அமைப்புகள்2. தாழ்ப்பாள் உள்ள கதவுகள் 1,600. தொலை பேசிகள் 500. குடிநீர்க் குழாய்கள் 70. மின்கம்பித் தொகுப்புகள் 20,000 மைல்கள். குழல்களும் குழல் அமைப்புகளும்” 380 மைல்கள். நீராவியைக் குளிர்விக்கும் முறையில் நாடோறும் தயாராகும்

10, Floating Museum 1 1 . Hall Bearn 12. Power plant 13. Boilers 14. Steam turbines 15. Propellers

16. Capacity 17. Elevators 18. Piping and Tubing.