பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 0 என் அமெரிக்கப் பயணம்

தூயநீர் 85,000 காலன்கள் கப்பலில் பணியாளர்கள் 3500 கப்பலில் போர்த் தொடக்கத்திலிருந்த போர்விமானங்கள் 80-90; போர் முடிவில் இருந்தவை 110.

போரில் இதன் செயல்கள்: எதிரிகளின் போர் விமானங்களில் விமான அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப் பெற்றவை-266. கப்பலிலுள்ள துப்பாக்கி அமைப்புகளால் வீழ்த்தப் பெற்றவை 14. தரையிலிருந்து வீழ்த்தப் பெற்றவை 298 எதிரிகளின் போர்க்கப்பல்களில் மூழ்கடிக்கப் பெற்றவை 106; பழுதாக்கி செயலிழக்கப் பெற்றவை 178.

எட்டுமாத கால செயற்பாடு:இக்காலப் பகுதியில் பயணித்த தொலைவு 1,00,000 மைல்கள். எரிக்கப்பெற்ற எரிபொருளின் அளவு 16,000,000 காலன்கள். மேலியக்கும் வாயுவை எரித்த அளவு 8,00,000 காலன்கள். பயன்படுத்திய குடிநீர் 25,000,000 காலன்கள். உண்ட உணவு 3,200,000 இராத்தல்கள். சலவை செய்யப்பெற்ற துணிகள் அளவு 3,000,000 இராத்தல்கள். நாடோறும் பயன்பட்ட காபி அளவு 300 இராத்தல்கள். ஒருமுறை உணவில் உண்ட உருளைக்கிழங்கு ஒரு டன்.

இவற்றை அறிந்த நமக்கு தலைசுற்றத் தொடங்குகின்றது. மனித ஆணவத்தால் நேரிட்ட போரின் விளைவுகளைக் கண்டு வியப்பு ஒருபுறம்: எரிச்சல் ஒருபுறம் எழும் சினம் ஒருபுறம்.இந்நிலையில் வள்ளுவரின் பொய்யா மொழிகள் நினைவிற்கு வருகின்றன.

இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்”

ஒருவன் ‘மாறுபாடு என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்திலிருந்து நீக்கிவிட்டால் அஃது அவனுக்கு எந்தக் காலத்திலும் அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும் என்கிறார். இக்கருத்து தனிப்பட்ட நபருக்கு அன்றி நாட்டிற்கும் பொருந்தும். நல்ல எண்ணத்துடன் ஐ.நா. நிறுவனம் இது நேரிடாமல் இருப்பதற்காகவே ஏற்படுத்தப் பெற்றுள்ளது. இதில் சேர்ந்துள்ள நாடுகள் அகந்தையையும் ஆணவத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு நன்னோக்கத்துடன் செயற்பட்டால் உலகிற்கு நன்மை பயக்கும்.

காரை ஓர் ஒதுக்கிடத்தில் நிறுத்திய என் மகன் இன்ட்ரெயிட்

கப்பலுக்குள் அழைத்துச் செல்லுகின்றான். இஃது ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாகும். ஒரு சிறிய இரும்பாலான பாலம். அதனை கடந்து கப்பலின் நடுத்தட்டுக்கு வருகின்றோம். முதலில் இக்கப்பல் மாதிரி செய்யப்

19. குறள்-853 (இகல்-3)