பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 69

பெற்ற பொம்மைக் கப்பலைக் கண்ணுறுகின்றோம். டைட்டானிக்’ கப்பல் மாதிரி உள்ள பொம்மைக் கப்பலையும் பார்க்கின்றோம். ஒரிடத்தில் போர் வீரர்கள் எப்படியிருப்பர் என்பதை விளக்கப் போர் ஆடைகளை அணிந்த நிலையில் மூன்று பொம்மைவீரர்கள் வைக்கப் பெற்றிருப்பதை நோக்குகின்றோம். பலவேறு போர் வீரர்களின் தலைக்கவசங்கள்’ பார்வையாளர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக வைக்கப் பெற்றுள்ளதைக் கவனிக்கின்றோம்; போர் வீரர்கள் அணியும் காலணிகளைக்’ காணமுடிகின்றது; வெவ்வேறு வகைப் போர் உடுப்புகள் ஒரிடத்தில் வைக்கப் பெற்றிருந்ததைக் காண்கின்றோம். போர்வீரர்கள் பயன்படுத்தும் சாமான்கள், சட்டைகளில் அவர்கள் குத்திக் கொள்ளும் அடையாளம்’, பயன்படுத்திய தாள்கள், இறந்தவர்கள் எலும்புகள், சாம்பல் முதலியவைகள் காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன.

மூன்று நான்கு இடங்களில் கப்பலின் மேல்தட்டில் வைக்கப் பெற்றுள்ள விமானங்கள் போன்ற பொம்மை விமானங்கள் படகு போன்ற அமைப்புகளில் காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன. இன்னும் எத்தனையோ சொல்லி முடியா நினைவுச் சின்னங்கள் காட்சிகளாக அமைந்துள்ளன.

விமானத்தில் பறக்கும்போது பெறும் உணர்வுகளை அநுபவிப்பதற்கான சுழலும் அமைப்புகள்’ வைக்கப் பெற்றுள்ளன. தனிக்கட்டணம் செலுத்தி அவற்றில் ஏறி இந்த அநுபவத்தைப் பெறலாம். என் வயது நிலைக்கு அது ஒவ்வாததால் நான் அந்த ஏற்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. கப்பலில் இருந்தவாறே விண்ணில் பறந்து பெறும் அநுபவங்களை நிதர்சனமாகக் காட்டும் அற்புதமான அமைப்புகள் இவை.

ஆண்டு முழுவதும் இந்த பழம்பொருள் அருங்காட்சியகம்” சிறப்புக்காட்சிப் பொருள்களையும்’ நிகழ்ச்சிகளையும் காட்டுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. நாங்கள் சென்ற அன்று சிலவற்றைக் கண்டுகளித்தோம். அப்போலோ-11 என்ற விண்வெளிக்கலம் அம்புலி மண்டலத்தில் இறங்கினபோது அம்மண்டலத்தின் தரைநிலைகள் காட்டப்பெற்றதைப் பார்த்தது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

இங்கு இன்னொரு காட்சியக ஏற்பாடு உண்டு. மிக்க செயல் நுணுக்கப் பொறியமைப்புள்ள ஏற்பாடு இது. ஒரு கட்டணம் தந்து இதனுள் நுழைந்தால் கடற்படைக் கப்பலில் செல்லும் போது ஏற்படும் திடீர் உணர்வுகளால் நேரிடும்

20. Titanic (1912). இதில் இறந்தவர்கள் 2223 பேர் 21. Helmets 22. Shoe 23. Emblem 24. Simulators 25 Museum 26 Exhibits