பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 0 என் அமெரிக்கப் பயணம்

மகிழ்ச்சிப் பெருக்கை அநுபவிக்கலாம். என் வயதுக்கு உகந்ததாக இல்லாததால் இந்த அநுபவத்தைப் பெறவிரும்பவில்லை.

அடுத்து மின்விசை ஏற்றத்தின் மூலம் கப்பலின் மேல் தட்டுக்கு வருகின்றோம். ஏ-12 பிளாக்பேர்டு என்ற மிகவும் விரைந்து செல்லும் உளவுபார்க்கும் விமானம் நம் கவனத்தைக் கவர்கின்றது. வரிசை வரிசையாக வைக்கப் பெற்றுள்ள போர் விமானங்களைக் கண்டு வியப்பெய்துகின்றோம். இவை எத்தகைய அழிவுச் செயல் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பவற்றை நினைந்து பார்க்கின்றோம். இந்தத் தளத்திலிருந்து கொண்டே கீழேயுள்ள அழிபடைக் கருவியையும் நீர் மூழ்கிக் கப்பலையும் காண்கின்றோம். அழிபடைக் கருவிகளின் செயற்படு அமைப்புகளைக் கண்டு வியப்பெய்துகின்றோம். (படம் - 17)

கப்பல் பணியாளர் உண்ணும் தளம்': இவற்றையெல்லாம் நிதானமாகப் பார்த்துக் கொண்டே மின்விசை இறக்கம் மூலம் பணியாளர் உண்ணும் தளத்திற்கு வருகின்றோம். இன்ட்ரெபிட்டின் மிக அடிமட்டத்தில் உள்ளது இப்பகுதி. அண்மைக் காலமாகத் தான் இது பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடாகியுள்ளது என்பதை அறிகின்றோம். இது மிகவும் விசாலமான பகுதி, சமையலறை, உண்ணும் விசாலமான பகுதி, ஒய்வு கொள்ளும் பகுதி என பல பகுதிகள்.வளைந்து வளைந்து வந்து இப்பகுதிகளை கண்டு வியப்பெய்துகின்றோம். அனைத்தும் அற்புதமான அழகான அமைப்புகள். உயிர்களைப் பணயம் வைத்துப் போர்த்தொழில்களில் இறங்கியவர்களல்லவா?

மீண்டும் மின்விசை ஏற்றம் மூலம் நடுத்தளத்திற்கு வந்து சிறிய இரும்புப் பாலத்தின் வழியாக வெளியே வருகின்றோம். அழிபடைக் கருவியையும் நீர்மூழ்கிக் கப்பலையும் உள் சென்று பார்க்கவில்லை. வெளியிலிருந்தே பார்த்தவண்ணம் வீடு திரும்ப ஆயத்தமாகின்றோம்.

கப்பலை பார்க்கும் நேரம் இளவேனில்வேனில் காலங்களில்’ (ஏப்ரல் 1-செப்டம்பர் 30). திங்கள்-வெள்ளி முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை. சனி-ஞாயிறு விடுமுறை நாட்களில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7 மணி வரை. இலையுதிர் காலம்/மழைக்காலம்” (அக்டோபர் 1-மார்ச் 31) செவ்வாய்-ஞாயிறு முற்பகல் 10 மணி முதல்-பிற்பகல் 5 மணி வரை. மூடுவதற்கு 1 மணி முன்னால் வரை நுழைவு அனுமதிக்கப்பெறும். நன்றி வழங்கும் கிறிஸ்துமஸ் நாட்களில் மூடப் பெற்றிருக்கும். எல்லா விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.

27 Elevator 28. Crew-Mess Deck 29, Spiring/Summer 30, Fall-Winter