பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 0 71

இச்செய்திகளை அறிந்தவண்ணம் எல்லோருமே சில தெருக்களைக் கடந்து கார் நிறுத்தப் பெற்றுள்ள இடத்திற்கு வருகின்றோம். காரில் வீடு திரும்புகின்றோம். வரும்போது சில தடைகளிருந்ததால் சுற்று வழிகளில் வந்தோம் அல்லவா? அத் தடைகள் நீக்கப் பெற்று விட்டதால் நேர் வழியில் திரும்புகின்றோம். ஐ.நா. கட்டடத்தின் அருகிலும் சிட்டிவங்கியின்’ உயர்ந்த கட்டடத்தின் அருகிலும் வர நேரிடுகின்றது. அவற்றை நிதானமாக நோக்கி மகிழ்ந்த வண்ணம் பிற்பகல் 2.15 மணிக்கு இல்லத்தை அடைகின்றோம். (படம் - 18)

4. கடைகள்

மனிதன் தனக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கு இன்றியமையாத அமைப்புகள் கடைகள். அமெரிக்காவில் இத்தகைய அமைப்புகள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. என் மகனுடன் தங்கியிருந்தபோது நான்கு கடைகளுக்குக் கூட்டிச் சென்றான். அவை பற்றிய விவரங்களை ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.

1. ஜேக்சன் உயர்வுகள்': (ஏப்ரல் 18 அன்று இதனைக் காணச் சென்றோம்) இப்படி ஒர் இடம். என் மகன் இல்லத்திலிருந்து சற்றேறக்குறைய ஆறுகல் தொலைவு. பெரும்பாலும் இந்தியர்களால் நடத்தப்பெறும் அங்காடிக் கடைகள். சிறப்பாக குஜராத்தைச் சேர்ந்த வணிகப் பெருமக்களால் மிகப் பெருமையுடன் இக் கடைகள் இயங்கி வருகின்றன. ஒரு நாள் முற்பகல் 10.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்று பகல் 1.15 மணிக்குத் திரும்பினோம். கார் நிறுத்துமிடத்தில் கட்டணம் செலுத்தும் அமைப்பு சாலையோரத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு அரை டாலர் வீதம் போடவேண்டும். ஒரே சமயத்தில் மூன்று மணி நேரத்திற்குப் போடமுடியாது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்து போடவேண்டும்.

நம்மூர்களில் குஜராத் மக்களில் ஆண்களே கடைகளை நடத்துபவர்களாகக் காண்கிறோம். பெண்கள் வீட்டைவிட்டு வெளிவருவதில்லை. முக்காடிட்டுக் கொண்டு இல்லத்திலேயே தங்கியிருப்பதைக் கண்டுள்ளோம். பாரதியார் கூட இதனைத் தம் கண்ணன் பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் தங்க நகைக் கடைகளே அதிகம். இங்குதான் 22, 24 காரட்டுத் தங்க நகைகள் கிடைக்கும். தங்க நகைக் கடைக்குள் தனியாக

31. U.N. Building 32. Citi Bank 1. Jackson Heights - நியுயார்க் குயின்ஸ் பகுதியில் தான் இது உள்ளது. 3. பிற இடங்களில் 10, 12, 16 காரட்டுகளில்தான் கிடைக்கும்.