பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஓய்வு பெற்றது

வேலையிலிருந்து ஓய்வு பெற்றது

191 9-ஆம் வருஷம் மார்ச்சு மாத இறுதியில் ஆசிரியப்பெருமான் தமிழாசிரியர் வேலையிலிருந்து ஒய்வு எடுத்துக் கொள்ளும் நிலை வந்தது. இதனைத் தெரிந்துகொண்ட அன்பர் பலர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினர். பலர் அவர் தமிழாசிரியராக இருந்ததல்ை பல மாணவர்கள் தமிழை விருப்பத்துடன் படித்து வந்தார்கள் என்றும், இனி வரும் மாணவர்களுக்கு அந்தப் பேறு கிடைக்காதே என்றும் வருந்தி எழுதினர்கள். இன்னும் சிலர், வேலையிலிருந்து கொண்டே பல தமிழ்நூல்களைப் பதிப்பித்த ஆசிரியப்பெருமான், இனிமேல் தம் நேரம் முழுவதையும் பதிப்புத்துறையில் செலவிடச் சத்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்து எழுதினர்.

1919-ஆம் ஆண்டு ஆசிரியப் பெருமான் ஒய்வுபெற்றுச் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பிரிந்தார். அவ்வாறு பிரியும் நாள் அன்று அக்கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டார். அப்போது முதல்வராக இருந்த ஆலன் துரையின் அறைக்கும் சென்ருர்.

முதல்வர் ஆசிரியப் பெருமானை அன்புடன் வரவேற்று நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். உங்களால் இந்தக் கல்லூரியும், இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் பெரிதும் பயன் அடைந்திருக்கிரு.ர்கள். உங்களுக்கும் கல்லூரியைப் பிரிந்து செல்வது வருத்தமாகத்தான் இருக்கும். மாணக்கர்கள் உங்களேத் தம் தந்தை, யைப் போலவே எண்ணி மதிப்பு வைத்து மகிழ்ந்தார்கள். இந்த நேரத்தில் என்னல் உங்களுக்குச் செய்யக்கூடிய உதவி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். அதனை மிக்க மகிழ்ச்சியோடு நிறை. வேற்றுவேன்” என்று முதல்வர் சொன்னர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இவர் நினைத்தார். இதுவரை இந்தக் கல்லூரியில் தமிழாசிரியர் பதவியில் நன்கு கற்ற புலவர்களே இருந்து வந்திருக்கிருர்கள். இந்த நாட்டில் மாநிலக் கல்லூரி சிறந்த நிலையை வகிக்கிறது. இதன் பெருமையைப் பாதுகாத்து அதிகப்படுத்தும் முறையில் பேராசிரியர் களும் இருந்து வருகிருர்கள். தமிழ்ப் பேராசிரியர் கிடைக்கா விட்டாலும், எனக்குப் பின்னும் இங்கே வருகிற பண்டிதர் நல்ல