பக்கம்:என் சுயசரிதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கூப்பிடும் பதம், ஆதலால் அவர்களை “நாயினா-அம்மா” (தகப்பனாருக்குத் தாயார்) என்று சொல்லவேண்டும் என்று எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.

இனி என் தாயாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர்கள் சிவப்பாயிருப்பார்கள், தமிழ் கொஞ்சம் படிக்கத் தெரியும், அவர்கள் எப்பொழுதும் மத சம்பந்தமான புஸ்தகங்களைத்தான் படிப்பார்கள், அல்லது மற்றவர்களை படிக்கச்சொல்லி கேட்பார்கள். தினம் காலையில் துளசி பூஜையும் மாலையில் விக்னேஸ்வரர் முதலிய தெய்வங்கள் பூஜையும் செய்யாமல் போஜனம் கொள்ளமாட்டார்கள். வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் இவ்விரண்டு பூஜையையும் விசேஷமாக செய்வார்கள், அத்தினங்களில் பூஜை முடிந்தவுடன் எங்களுக்கெல்லாம் பூஜை செய்த புஷ்பங்களைக் கொடுப்பார்கள். நாங்கள் அவர்கள் பாதத்தை சேவித்து புஷ்பங்களை வாங்கிக்கொள்வோம். அவர்கள் தான் எனக்கு, எனது ஒன்பதாவது வயதிலோ பத்தாவது வயதிலோ, பூஜைசெய்ய கற்பித்தார்கள். அவர்கள் எனக்கு கற்பித்தமுறையில் தினந்தோறும் காலை மாலைகளில் சாதாரண பூஜையும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜையும் அக்காலம் முதல் இக்காலம் வரை செய்து வருகிறேன், காலை மாலை பூஜை முடிந்தவுடன் என் மாதா பிதாக்களையே என் தெய்வங்களாகக்கொண்டு அவர்களுடைய படங்களுக்கு பூஜைசெய்து வருகிறேன்.

என் தாயார் (அவர்கள் பெயர் மாணிக்கவேலு அம்மாள்) மிகவும் இளகிய மனதுடையவர்கள், 1875 ஆம் வருஷம் தன் மூத்த குமாரி வாந்தி பேதியினால் இறந்தது முதல் நீர் வியாதியால் பிடிக்கப்பட்டார்கள். பிறகு 1885 ஆம் வருஷம் என் மற்றொரு தமக்கையாகிய பர்வதம்மாள் இறந்த போது உலகை வெறுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அது முதல் தினம் ‘கைவல்ய நவநீதம்’ முதலிய வேதாந்த புஸ்தகங்களை படிக்கச் சொல்லி, கேட்டுக் கொண்டிருப்பார்கள், கடைசி காலத்தில் அவர்கள் வைராக்கிய மனதுடையவர் களானார்கள் என்றே சொல்ல வேண்டும். அதைப் பற்றிய சிறுகதை ஒன்றை எழுதுகிறேன்.

1891 ஆம் வருஷ ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் நாங்கள் எழுந்திருந்த போது எங்கள் வீட்டில் எங்கள் தாய் தந்தையர்களில்லாதிருப்பதைக் கண்டு என்னவென்று வேலைக்காரர்களை விசாரிக்க அவர்கள் எங்கள் தந்தை தாயார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/10&oldid=1112812" இலிருந்து மீள்விக்கப்பட்டது