பக்கம்:என் சுயசரிதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

(Biology) பேராசிரியராக இருந்தார். எங்கள் காலேஜில், அவர் என்னை சந்தித்தபோது நான் தனக்குப் பிரியமான உடற்கூறு சாஸ்திரத்தில் பிரசிடென்ஸியில் முதலாவதாக இருந்ததற்காக என்னை சிலாகித்து “நீ பையாலஜி எடுத்துக் கொண்டு என் வகுப்பில் வந்து சேர்” என்று கூறினார். நானும் இசைந்தேன். முதல் நாள் அவர் வகுப்பில் என்னை பக்கலில் உட்காரவைத்துக்கொண்டு ஒரு தவளையைக் கொன்று டிஸ்செலக்ட் செய்து காண்பித்தார்; என் மனம் அதைக்கண்டு தாளவில்லை! உடனே நான் இந்த படிப்பிற்கும் நமக்கும் பொருத்தமில்லை என்று தீர்மானித்து என் தகப்பனாரிடமிருந்து உத்தரவு பெற்று காலேஜ் பிரின்ஸ்பாலாகிய மிஸ்டர் ஸ்டூவர்ட்டிடம்போய் என் சப்ஜெக்ட்டை பையாலஜியிலிருந்து சரித்திரத்திற்கு மாற்றிக்கொண்டு பிறகுதான் சரியாகத் தூங்கினேன். சரித்திரமானது நான் எப்பொழுதும் பிரியப்பட்ட நூல். சிறு வயது முதல் என் ஞாபகசக்தி கொஞ்சம் நன்றாய் இருந்தபடியால் சரித்திரத்தில் எந்த பரிட்சையிலும் முதலாவதாக வந்து நல்ல மார்க்கு வாங்கினேன்.

பரிட்சையில் தேறுவோமோ என்னவோ என்று பயமின்றி நான் படித்தது பி. ஏ. வகுப்பில்தான், பி. ஏ. வகுப்பில் அக்காலம் பரிட்சைக்குப் போகுமுன் மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கவேண்டியிருந்தது. முதல் வருஷம் முடிந்தவுடன் நடக்கும் பரிட்சையில் இங்கிலீஷில் எந்த பிள்ளை முதலாவதாக தேறுகிறானோ அவனுக்கு ஒரு ஸ்காலர்ஷிப் உண்டு. அதற்கு தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் என்று பெயர். இது ஒருவருடத்திற்கு மாதம் 10 ரூபாயாம். இதை எப்படியாவது பெறவேண்டுமென்று தீர்மானித்தேன். ஆகவே என் காலத்தையெல்லாம் இங்கிலீஷ் டெக்ஸ்ட் (Text) புத்தகங்களை படிப்பதிலேயே செலவழித்தேன். 1889-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தில் பரிட்சை வந்தது. அதில் நான் நன்றாய் பதில் எழுதியபோதிலும் எனக்கு அந்த ஸ்காலர்ஷிப் பெறுவோமோ என்று சந்தேகமாயிருந்தது. நமக்கு மேல் கெட்டிக்காரர்களான பல பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆகவே அது நமக்குக் கிடைப்பது அரிது என்று அந்த ஆசையை விட்டேன். 1890-ஆம் வருஷம் எங்கள் வகுப்புப் பிள்ளைகளெல்லாம் நான்காவது வகுப்பாகிய சீனியர் பி. ஏ. கிளாசுக்கு மாற்றப்பட்டோம். ஒரு நாள். என்னுடைய சிநேகிதர்களாகிய ஜகதீசஜயர், திருநாராயணாச்சாரி முதலியோருடன் சாயங்காலம் வகுப்பு களெல்லாம் விட்டபிறகு கிரிக்கெட் (Cricket) ஆடும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த சமயம், தனக்கு தேக அசௌக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/25&oldid=1123264" இலிருந்து மீள்விக்கப்பட்டது