பக்கம்:என் சுயசரிதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

களின் மொத்த தொகை எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் சுமார் ரூபாய் 144 ஆயிற்று. இதற்காக கொடுக்கப்பட்ட செக்கை என் தகப்பனாரிடம் கொடுத்து சந்தோஷப்பட்டேன். அவரும் சந்தோஷப்பட்டார்.

1893-ஆம் வருஷம் நான் பி.ஏ. பட்டம் பெற்றபோது சென்னை சர்வ கலாசாலையாரால் சரித்திரத்தில் முதலாவதாக தேறின தற்காக நார்த்விக் (Northwick) பரிசு கொடுக்கப்பட்டது.

நடு பருவம்

பி.ஏ. தேறினவுடன், நான் லாயராக வேண்டுமென்று தீர்மானித்து லா வகுப்பைச் சேர்ந்தேன். லாகாலேஜில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து காலேஜிக்கு சைகிளிலில் போய்க்கொண்டிருந்தேன். இந்த லாகாலேஜில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார். அவர் அப்படி சேர்ந்தவுடன் எங்கள் பழைய ஏற்பாட்டின்படி எப்பொழுதும் வகுப்பில் நாங்களிருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக் கொண்டு காலங்கழிப்போம். இதற்கு ஒத்தாசையாக நான் முன்பு கூறிய வாமன்பாய், ஸ்ரீனிவாச பாட் என்னும் இரண்டு. மங்களூர் நண்பர்களும் கே. ஆர். சீதாராம ஐயரும் சேர்ந்தார்கள். எந்த வகுப்பிலும் நாங்கள் பஞ்சபாண்டவர் களைப்போல் எந்நேரமும் உட்கார்ந்து பேசிகொண்டிருப்போம், வாஸ்தவமாய் சொல்லுமிடத்து.

நான் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது 1895-ஆம் வருஷம் என் ஆயுளில் மற்றொரு துக்ககரமான சம்பவம் நேர்ந்தது. அதாவது அவ்வருஷம் மே மாதம் 26-ந் தேதி என் தந்தை சிவலோகப்பிராப்தி ஆனார். உண்மையைக் கூறுமிடத்து அவரது மரணம் என் தாயாரின் மரணத்தைப் போல் அவ்வளவு துக்க சாகரத்தில் ஆழ்த்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் மரணத்திற்கு 6 மாதம் முன்பாகவே ஓர் கொடிய வியாதியால் அவர் கஷ்டப்பட்டபோது இனி இதனின்றும் அவர் பிழைப்பது அரிது என்று வைத்தியர்கள் எங்களுக்கு தெரிவித்ததேயாம். அக்காலம் முதல் கொஞ்சம் கொஞ்சம் இனி வரப்போகிற துக்ககரமான சம்பவத்திற்கு நமது மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/29&oldid=1112703" இலிருந்து மீள்விக்கப்பட்டது