பக்கம்:என் சுயசரிதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

இந்த நிபந்தனையினின்றும் சுமார் 25 வருடங்கள் நான் வக்கீலாக வேலை பார்த்த காலமெல்லாம் மாறவில்லை. ராத்திரியில் யாராவது என் வீட்டிற்கு வந்து ‘அர்ஜென்ட் வியாஜ்யம்’ என்று என்னை தொந்தரவு செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பதில், ஏற்பாடு செய்து கொண்டேன். அதாவது “உங்கள் வியாஜ்யம் இன்றிரவு ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லையே!நாளைக் காலை 11 மணிக்குத்தானே. கேஸ் (case) ஆகவே தயவுசெய்து நாளை காலை வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். இந்த வழக்கத்தை அறிந்த என் மாமூலாக வரும் கட்சிக்காரர்கள் என்னை சாயங்காலங்களில் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களிடமும் “இந்த வக்கீல் சாயங்காலத்திற்குமேல் கோர்ட் வியாஜ்யங்களைப் பார்க்கமாட்டார்-- பீஸ் (Fees) கொடுத்த போதிலும் நாளை காலை கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். ஆகை பால் அவரை 5 மணிக்குமேல் போய் பார்ப்பதில் பிரயோகன மில்லை”, என்று தடுத்துவிடுவார்கள்.

இந்த கோட்பாட்டினால் எனக்கு ஒரு பெரிய நன்மை கிடைத்தது. சாதாரணமாக ஹைகோர்ட் வக்கீல்கள் நாற்பது ஐம்பது வயதாவதற்குள் நீர் வியாதி, குன்ம நோய் முதலிய ஏதாவது வியாதிக்கு உள்ளாகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலக்கிரமப்படி போஜனம் கொள்ளாததும், தக்கபடி சாயங் காலங்களில் வியாயாமம் (exercise) எடுத்துக் கொள்ளாததுமாம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கின்றார். எத்தனை சிறந்த வக்கீல்கள் சுமார் 50 வயதிற்குள் வியாதிக்கு ஆளாகி மடிந்திருக்கின்றனர்! தேகத்தில் சிறு வயது முதல் தக்க பலமில்லாத நான் இப்ப ஏதாவது வியாதிக்கு ஆளாகாமல், தடுத்தது காலக்கிரமப்படி போஜனங் கொண்டதும் சாயங் காலங்களில் ஏதாவது வியாகாமமும் எடுத்துக்கொண்டு தக்கபடி ஓய்வையும் எடுத்துக்கொண்டு ஓய்வு காலங்களில் மனத்திற்கு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கத்தக்க மனதிற்கினிய தொழில் (Hobby), ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நடந்துவந்ததே, இதுவரையில் ஈஸ்வரன் கிருபையில் என் தேக நலத்தை காப்பாற்றிக்கொண்டு வரச் செய்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

நான் வக்கீலாக நடவடிக்கை நடத்திய காலத்தில் எனக்கே மற்றொரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டேன். அதாவது கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தால் அவர்கள் வியாஜ்யம் பொய்யானது, தப்பானது; நியாயமல்ல என்று என் புத்திக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/33&oldid=1112832" இலிருந்து மீள்விக்கப்பட்டது