பக்கம்:என் சுயசரிதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பட்டால் அவர்கள் வியாஜ்யத்தை எடுத்துக்கொள்ளக் கூடாதென்பதாம். இதனால், என்னிடம் வந்த பல வியாஜ்யங்களை ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் இதனால் நான் ஒரு நன்மை பெறாமல் போகவில்லை. அதாவது “சம்பந்தம் சாதாரணமாக தப்பான கேசுகளை எடுத்துக்கொள்ளமாட்டான்” என்னும் பெயர் பெற்றேன் என்று நினைக்கிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வேன். “ஐயா, வைத்தியனிடம் போய் உங்களுக்கு ஒரு வியாதி இருக்க அதை மறைத்து வேறொன்றைக் கூறினால் அந்த வைத்தியன் உங்கள் உண்மையான வியாதியைக் குணப்படுத்த முடியுமா? அதுபோல வக்கீலாகிய என்னிடம் உண்மையைக் கூறுங்கள். பிறகு உங்கள் வியாஜ்யத்திற்குப் பரிஹாரம் தேடுகிறேன்” என்று சொல்வேன்.

இப்படி சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வியாஜ்யங்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் கோர்ட்டு ஜட்ஜிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வியாஜ்யங்களை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் கேஸ் என்று கண்டறிந்தால் கோர்ட்டில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் சம்அப் (Sumap) செய்ய வேண்டி வரும்போது நான் வேறொன்றும் சொல்லாமல் “இந்த வியாஜ்யத்தில் கோர்ட்டார் காலத்தை இன்னும் எடுத்துக்கொள்ள எனக்கிஷ்டமில்லை” என்று முடித்திருக்கிறேன். இப்படி செய்ததினால் ஜட்ஜ்கள் இதர கேசுகளில் நான் வற்புறுத்தி பேசினால் அவைகளில் ஏதோ உண்மை இருக்கவேண்டுமென்று என்னைப் பொறுமையுடன் கேட்டிருக்கின்றனர். இதைப்பற்றி சில கோர்ட்டு வக்கீல்கள் நான் செய்தது தவறு “நிஜமோ தப்போ கடைசிவரையில் மன்றாடித்தான் தீரவேண்டியது வக்கீல் கடமை” என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். ஹைகோர்ட்டில் ஒரிஜினல் வியாஜ்யம் ஒன்றை ஆனரபில் ஜஸ்டிஸ் பாடம் முன்பாக நான் ஒருமுறை நடத்திய போது பிரதிவாதிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்ட நான் வாதியையும், வாதி சாட்சிகளையும் இரண்டு நாள் குறுக்கு கேள்விகள் (Cross Examination) கேட்டேன். அது முடிந்தவுடன் பிரதிவாதிக்காக சாட்சிகள் ஒருவரையும் நான் கூப்பிடவில்லை. அன்றியும் சம்அப் (Sumup) செய்ய வேண்டி வந்த போது “வாதியின் சாட்சிகளை கிராஸ் (Cross) பண்ணவேண்டியதை என் கடமைப்படி செய்தேன். சம்ஆப் செய்யவேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/34&oldid=1123268" இலிருந்து மீள்விக்கப்பட்டது