பக்கம்:என் சுயசரிதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சுருக்கமாய் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது. இவருடன் காஸ்மாபாலிடன் கிளப்பில் சனிக்கிழமைகளில் சீட்டாடுவேன். அச்சமயம் கோர்ட்டில் நடக்கும் பல வேடிக்கைகளைப்பற்றிய கதைகளை மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கெல்லாம் சொல்லி சிரிப்புண்டாக்குவார். அவற்றுள் ஒன்றை இங்கு எழுதுகிறேன். ஒருநாள் “சம்பந்தம், நான் கோர்ட்டுக்கு வரும்போது மிகவும் தலைகுனிந்தபடி வருகிறேனே அதற்குக் காரணம் தெரியுமா?” என்று கேட்டார். “வணக்கமாய் வருவது நல்லது என்று நீங்கள் அப்படி செய்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன். அதற்கவர் “அது. ஒருபுறமிருக்கட்டும். நான் முதல் முதல் கோர்ட்டில் என் ஆசனத்தில் உட்கார வரும்போது தலை நிமிர்ந்து கொண்டு வத்தேன். அப்போது பங்கா இழுக்கும் கோர்ட்டுக்கு பின்புறமிருக்கும் வேலையாள் வேகமாய் பங்காவை இழுத்துவிட்டான். உடனே என் தலை குட்டை பங்காவினால் தாக்கப்பட்டு எகிரிப் போய் விழுந்தது. அது முதல் நான் வரும்போதெல்லாம் மிகவும் தலை குனிந்து கொண்டுவர ஆரம்பித்தேன்” என்று பதில் சொன்னார். இது நடந்தபோது ஹைகோர்ட்டில் இப்போதிருப்பது போல் மின்சார பங்கா (electric fan) கிடையாது.

இதன்பிறகு இந்த கோர்ட்டில் ஜட்ஜாக நியமிக்கப்பட்டவர் சர் வி. சி. தேசிகாச்சாரியார். சாதாரணமாக இவர் கோர்ட்டில் எனக்கு அதிக கேசுகள் கிடைக்கும். இதற்குக் காரணம் நான் அவரது நன்மதிப்பைப் பெற்றதே என்று நினைக்கிறேன். இவர் ஒரு சிநேகிதரிடம் ஆங்கிலத்தில் சொன்னதாக அந்த சிநேகிதர் எனக்கு தெரிவித்ததை தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “தங்கள் கட்சிக்காரர்களின் ஊழல்களை மறைத்து கோர்ட்டார் கண்ணில் மண்ணைப் போட்டு வியாஜ்யங்களை ஜெயிக்க விரும்பாத வக்கீல்கள் இரண்டு பெயர்கள்தான். ஒருவர் பி. எம். சிவஞான முதலியார், மற்றொருவர் சம்பந்த முதலியார்” என்றனராம்.

சிவில், வியாஜ்யங்களில் பீஸ் (Fees) விஷயத்தில் கோர்ட்டார் சட்டப்படி, ஒவ்வொரு வியாஜ்யத்திற்கும் என்ன பீஸ் உண்டோ அதற்குக் குறைவாக வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடந்துவந்தேன்.

எனது ஆருயிர் நண்பரான சி. ரங்கவடிவேலு முதலியார் தானும் பி. எல். பரிட்சையில் தேறினவுடன் அவரை எனது ஜூனியர் (Junior) ஆக வைத்துக்கொண்டு கோர்ட் வேலையைப் பார்த்துவந்தேன். அவர் 1923-ஆம் வருஷம் எனது துரதிர்ஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/36&oldid=1123270" இலிருந்து மீள்விக்கப்பட்டது